பெங்களூரு (கர்நாடகா): சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்-1 விண்கலத்தின், புவி வட்டப் பாதை 5வது முறையாக இன்று அதிகாலை உயர்த்தப்பட்டதை தொடர்ந்து, சூரியனின் லெக்ராஞ்சியன் புள்ளி 1-ஐ நோக்கிய பயணத்தை ஆதித்யா எல்-1 விண்கலம் தொடங்கியதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
-
Aditya-L1 Mission:
— ISRO (@isro) September 18, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Off to Sun-Earth L1 point!
The Trans-Lagrangean Point 1 Insertion (TL1I) maneuvre is performed successfully.
The spacecraft is now on a trajectory that will take it to the Sun-Earth L1 point. It will be injected into an orbit around L1 through a maneuver… pic.twitter.com/H7GoY0R44I
">Aditya-L1 Mission:
— ISRO (@isro) September 18, 2023
Off to Sun-Earth L1 point!
The Trans-Lagrangean Point 1 Insertion (TL1I) maneuvre is performed successfully.
The spacecraft is now on a trajectory that will take it to the Sun-Earth L1 point. It will be injected into an orbit around L1 through a maneuver… pic.twitter.com/H7GoY0R44IAditya-L1 Mission:
— ISRO (@isro) September 18, 2023
Off to Sun-Earth L1 point!
The Trans-Lagrangean Point 1 Insertion (TL1I) maneuvre is performed successfully.
The spacecraft is now on a trajectory that will take it to the Sun-Earth L1 point. It will be injected into an orbit around L1 through a maneuver… pic.twitter.com/H7GoY0R44I
சூரியனை ஆய்வு செய்யும் இந்தியாவின் முதல் விண்கலமான ஆதித்யா எல்1 விண்கலம், கடந்த செப்டம்பர் 2ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. பிஎஸ்எல்வி சி57 (PSLV C57) என்ற ராக்கெட் மூலமாக ஏவப்பட்ட ஆதித்யா L1, 648 கிலோ மீட்டர் உயரத்தில் பிரிக்கப்பட்டு, பூமியின் சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சூரியனை நோக்கி அதன் சுற்று வட்டப் பாதையை படிப்படியாக உயர்த்தும் பணிகள் மூன்று கட்டமாக செப்டம்பர் 3, 5 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடந்து முடிந்தன. அதன்படி ஒன்று, இரண்டு மற்றும் 3வது பூமியின் சுற்றுவட்டப் பாதையை இணைக்கும் செயல்பாடுகள் வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது.
அவை வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில், கடந்த செப்டம்பர் 14 அதிகாலையில் ஆதித்யா எல்1 விண்கலம், பூமியின் 4வது சுற்றுவட்டப் பாதையை வெற்றிகரமாக கடந்ததாக இஸ்ரோ தெரிவித்தது. குறைந்தபட்சம் 256 கிலோ மீட்டர் தொலைவும், அதிகபட்சம் ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 973 கிலோ மீட்டர் தொலைவும் கொண்ட சுற்றுப்பாதையில் ஆதித்யா பயணித்த நிலையில், இன்று அதிகாலை 2 மணியளவில் 5வது முறையாக விண்கலத்தின் சுற்று வட்டப்பாதை உயர்த்தப்பட்டது.
இந்நிகழ்வை பெங்களூருவில் உள்ள விண்வெளி கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து இஸ்ரோ விஞ்ஞானிகள் மேற்கொண்டனர். மேலும், இது குறித்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, தனது X வலைத்தளத்தில், “ஆதித்யா எல் 1 விண்கலம், சூரியன் - பூமி எல் 1 புள்ளியை சென்றடைந்தது. புதிய சுற்றுவட்டப் பாதையான டிரான்ஸ் - லக்ரேஜியன் பாயிண்ட் 1 இன்செர்ஷனின் TL1I (Trans lagrangean point 1 insertion) பாதை அதிகரிக்கப்பட்டது.
ஆதித்யா விண்கலம், தற்போது L1 புள்ளிக்குச் செல்லும் பாதையில் உள்ளது. சுமார் 110 நாட்களுக்குப் பிறகு, சூரியனுக்கும் பூமிக்கும் இடையிலான L1 சுற்றுப்பாதையில் செலுத்தப்படும். இஸ்ரோ, ஒரு பாதையில் உள்ள பொருளை, விண்வெளியில் உள்ள இடத்திற்கு 5 முறையாக மாற்றியுள்ளது” என கூறியுள்ளது.
இதனிடையே, அறிவியல் பூர்வமான தரவுகளை ஆதித்யா எல்-1 சேகரிக்கத் தொடங்கியதாகவும், அதில் உள்ள STEPS கருவி மூலம் அதிவெப்ப ஆற்றல், அயனிகள் மற்றும் எலக்ட்ரான்களை அளவிட தொடங்கியுள்ளதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: சூரியனை ஆய்வு செய்ய தொடங்கியது ஆதித்யா எல்.1 - தரவுகள் சேகரிப்பு - இஸ்ரோ தகவல்!