கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கிற்கு சுற்றுலா வந்த இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த இளைஞர் அவர் தங்கியிருந்த தங்கும் விடுதி அறையில் இறந்து கிடந்தார். அவர் நாதன் லெவி என்ற 29 வயது இளைஞர் எனக் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் செப்டம்பர் 27ஆம் தேதி டார்ஜிலிங்கில் உள்ள சந்தக்பூவுக்கு வந்து தங்கும் விடுதியில் தங்கியிருந்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய டார்ஜிலிங் மாஜிஸ்திரேட் பொன்னம்பலன் "வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு இளைஞர் சந்தக்பூ ஹோட்டலில் இறந்திருப்பதாகவும், அவர் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்தவர் எனவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அந்த தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பவயிடத்திற்கு விரைந்து உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து அந்நாட்டு தூதரகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடற்கூராய்விற்குப்பின்னரே உயிரிழப்பு குறித்த முழுவிவரங்கள் தெரிவித்தப்படும் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:பூனை கடி சிகிச்சைக்கு சென்ற இடத்தில் நாய் கடிக்குள்ளான இளம்பெண்