ETV Bharat / bharat

இஸ்ரேல் - ஹமாஸ் போர்: இரண்டரை லட்சம் இஸ்ரேலியர்கள் இடம் பெயர்ந்ததாக தகவல்! - kasa

Israel-Hamas war: இஸ்ரேல் - ஹமாஸ் போரில் இதுவரை சுமார் இரண்டரை லட்சம் இஸ்ரேல் மக்கள் இடம் பெயர்ந்து உள்ளதாகவும், போரில் இறந்தவர்களின் சடலங்களை அடையாளம் காணும் பணி முடுக்கி விடப்பட்டு உள்ளதாகவும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Israel-Hamas war
இஸ்ரேல் - ஹமாஸ் போர்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 1, 2023, 2:30 PM IST

டெல் அவிவ்: இஸ்ரேல் - பாலஸ்தீனத்திற்கு இடையேயான எல்லைப் பிரச்சினை குறித்து நூற்றாண்டுகளாக தொடர்ந்து அவ்வப்போது போர் நடைபெற்று வந்த நிலையில் சர்ச்சைக்குரிய காசா நகரை அடிப்படையாகக் கொண்டு இரு நாடுகளும் தொடர்ந்து போரிட்டு வருகின்றன.

பாலஸ்தீனத்தை அடிப்படையாகக் கொண்ட ஹமாஸ் பயங்கரவாதிகள் குழு இஸ்ரேலில் குண்டு வீச்சுத் தாக்குதலை கடந்த அக்.7 ஆம் தேதி தொடங்கியது. அதன்பின், இஸ்ரேலும் தனது தாக்குதலை தொடங்கப் போவதாக அறிவித்தது. இரு நாடுகளும் ஏறத்தாழ ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை ஏவி போரிட்டு வருகின்றன. தற்போது வரை இரு நாடுகளும் போரை நிறுத்த வில்லை.

இந்த போருக்கு ஐ.நா.சபை கடும் கண்டனத்தைத் தெரிவித்தது. அது மட்டுமல்லாமல், இஸ்ரேலுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்கியது. இந்தியா, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன. மேலும், அமெரிக்கா இஸ்ரேலுக்கு தேவையான ராணுவ உதவிகளை வழங்கி வருகிறது.

முன்னதாக தாக்குதலில் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்தும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தியா துணை நிற்கும் என பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இந்த தாக்குதலில் இஸ்ரேலில் சிக்கித் தவித்த இந்தியர்களை 'ஆப்ரேஷன் அஜய்' என்ற திட்டத்தின் மூலம் மத்திய அரசும், மாநில அரசுகளும் இணைந்து இந்தியர்களை மீட்டனர்.

இந்த நிலையில் காசா பகுதியானது பெருமளவு சேதம் அடைந்ததாக இஸ்ரேல் புகைப்படம் ஒன்றை வெளியிட்டது. காசா எல்லைப் பகுதியில் 1,400 இஸ்ரேல் மக்கள் கொல்லப்பட்டனர் என தகவல்கள் வெளியாகின. ஆனால் பாலஸ்தீன சுகாதாரத்துறை அதிகாரிகள் தரப்பில், இதுவரை காசா பகுதியில் 7 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதனிடையில் இந்தியாவிலிருந்து 6.5 டன் மருத்துவ உதவி பொருட்கள் மற்றும் 32 டன் பேரிடர் நிவாரணப் பொருட்கள் பாலஸ்தீன மக்களுக்கு கடந்த அக்.22 ஆம் தேதி அனுப்பி வைக்கப்பட்டது. இந்திய விமானப்படைக்குச் சொந்தமான சி-17 ரக போக்குவரத்து விமானம் மூலம் மருத்துவ மற்றும் நிவாரணப் பொருட்கள் மனிதாபிமான அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இஸ்ரேல் இராணுவ அதிகாரி கூறுகையில், “ இதுவரை சுமார் 2,50,000 பேர் போர் காரணமாக இஸ்ரேலில் இருந்து இடம் பெயர்ந்துள்ளதாக அதிகாரி கூறினார். மேலும், போரினால் தாக்கப்பட்ட பகுதிகளை இராணுவ வீரர்கள், உள்ளூர் மீட்பு பணியாளர்கள் மற்றும் உள்ளூர் கவுன்சில்களுடன் இணைந்து சரி செய்ய முயல்வதாகவும், போரில் இறந்தவர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட இருப்பதாக தெரிவித்து உள்ளார்.

இதையும் படிங்க:யுனெஸ்கோவின் சிறந்த நகரங்களின் பட்டியலில் இணைந்த இந்தியாவின் இரண்டு நகரங்கள்! அது எது தெரியுமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.