ஹைதராபாத்: பழைய ஹைதராபாத் நகரில் உள்ள ஃபலக்னுமா பகுதியில் முகமது அபுசானி என்பவர் வசித்து வருகிறார். இவர் சமூக வலைதளப்பக்கத்தில் பயங்கரவாத அமைப்பான ISIS அமைப்பின் பெயரில் இளைஞர்களிடம் தீவிரவாதத்தை தூண்டும் வகையில் பதிவுகளை போட்டிருந்தார்.
இதனை ஹைதராபாத் சைபர் குற்றப்பிரிவு போலீஸார் முகமதின் ஐபி சிக்னலை வைத்து அவரது முகவரியை கண்டுபிடித்துள்ளனர். பின்னர் முகமதிடம் விசாரித்த காவல்துறையினர் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பிற்காக ஆள் சேர்க்கும் நோக்கில் பதிவுகள் போட்டது தெரியவந்துள்ளது.
இதற்கு முன்னர் நடைபெற்ற சில அசாம்பாவித நிகழ்வுகளில் முகமது பங்கெடுத்துள்ளது தெரிய வந்துள்ளது. தற்போது முகமது கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் விசாரணையில் முகமதுவிற்கு ஈராக்கில் இருந்து ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்வதற்கு இளைஞர்களை மூளைச்சலவை செய்யும் பணி வழங்கப்பட்டிருக்கிறது.
ஈராக்கிலிருந்து வரும் காணொலிகளை சுற்றுவட்டாரத்தில் உள்ள உறவு முறை இளைஞர்கள் என அனைவருக்கும் அனுப்பி ஜிகாத் எனும் போருக்கு அனுப்பி வைக்கும் செயலில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்துள்ளது.
ISIS அமைப்பின் ஆதரவாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:ஹைதராபாத் பப்பில் அதிகாலை அதிரடி ரெய்டு!