ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா தனது படைகளை விலக்கியதைத் தொடர்ந்து, தாலிபான் ஆட்சியைப் பிடித்தது. அதிபராக இருந்த அஷ்ரஃப் கனி நாட்டைவிட்டு வெளியேறிய நிலையில், துணை அதிபராக இருந்த அமருல்லா சாலே, தன்னை காபந்து அதிபராக அறிவித்துக்கொண்டார்.
காபூல் விமான நிலையம் அருகே நேற்று தொடர் குண்டுவெடிப்பு ஏற்பட்டு, அதில் சிக்கி 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், இச்சம்பவத்திற்கு ஆப்கனில் உள்ள ஐ.எஸ். அமைப்பான 'ஐஎஸ் - கோரசான்' பொறுப்பேற்றுள்ளது.
குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு காபந்து அதிபர் அமருல்லா சாலே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அமருல்லா சாலே தனது ட்விட்டர் பதிவில், "ஐஎஸ் அமைப்பின் வேர்கள் தாலிபான்கள், ஹாக்கானி நெட்வொர்க்கிடம் தீவிரமாக பரவியுள்ளது.
இதற்கான ஆதாரம் உள்ளது. ஐஎஸ் அமைப்புடன் தங்களுக்கு தொடர்பு இல்லை என தாலிபான் சொல்வது ஏமாற்றுவேலை" எனக் கூறியுள்ளார்.
காபூல் குண்டுவெடிப்பு காரணமாக விமான நிலையம் பகுதி போர்க்களம் போல கட்சியளிக்கிறது. அதேவேளை, மீட்பு பணிகளை தொடர்ந்து மேற்கொள்வோம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: உங்களை வேட்டையாடுவோம் - பயங்கரவாதிகளுக்கு ஜோ பைடன் எச்சரிக்கை