ETV Bharat / bharat

கேரளாவில் ’பின்கதவு’ வழியாக வெளியேறிவிடுமா இடதுசாரி கூட்டணி?

author img

By

Published : Feb 11, 2021, 9:56 AM IST

சட்டவிரோதமான தற்காலிக அரசுப்பணி நியமனக் குற்றச்சாட்டு இடதுசாரி ஜனநாயக முன்னணி (எல்.டி.எஃப்.) கூட்டணிக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளதாக ஈடிவி பாரத்தின் செய்தி ஆசிரியர் பிரவீன் குமார் தெரிவிக்கிறார்.

இடதுசாரி எல்டிஃப் கூட்டணி
இடதுசாரி எல்டிஃப் கூட்டணி

கடந்த திங்கள்கிழமை, செவ்வாய்க்கிழமை ஆகிய தினங்களில் கேரளாவின் தலைநகரம் பொது சேவை ஆணையத்தின் (பப்ளிக் சர்வீஸ் கமிஷன்) தரப்பட்டியலில் இடம்பெற்றோர் நடத்திய வன்முறைப் போராட்டத்தால் நிலைகுலைந்தது. அப்போது, போராட்டக்காரர்கள் இருவர் தீக்குளிக்க முயன்றனர். இப்போதிருக்கும் தரப்பட்டியல்களின் காலவரையறையை நீட்டிக்க வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கை.

கோவிட் உலகத்தொற்றினால் ஏற்பட்ட இடர்ப்பாடுகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டு, கடந்த வாரம் அமைச்சரவை பிஎஸ்சி (பப்ளிக் சர்வீஸ் கமிஷன்) தரப்பட்டியல்களின் காலவரையறையை மேலும் ஆறு மாதத்திற்கு நீட்டித்திருந்தது.

ஆனாலும் அபேட்சகர்கள் சமாதானமாகாமல் போராட்டத்தைத் தொடர்ந்தார்கள். எதிர்க்கட்சிகளின் ஆதரவோடு அவர்களின் போராட்டம் தொடர்கிறது என்று பேசப்படுகிறது. சட்டசபைத் தேர்தல் வரவிருக்கும் நேரத்தில் எதிர்க்கட்சிகள் இளைஞர்களின் கோபத்தை வாக்குகளாக அறுவடை செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றன.

முதலமைச்சர் பினராய் விஜயன் பல்கலைக்கழக மாணவர்களோடு தற்போது உரையாடிக் கொண்டிருக்கிறார். அரசு வேலையில் தற்காலிகமாக இருக்கும் பணியாளர்களின் பணி மனிதாபின அடிப்படையில் நிரந்தரமாக்கப்படுகிறது என்றும், அது எந்தவிதத்திலும் தற்போதிருக்கும் பிஎஸ்சி தரப்பட்டியலில் இடம்பெற்றவர்களின் வாய்ப்புகளை பாதிக்காது என்றும் தெளிவுப் படுத்தியிருக்கிறார்.

ஆயினும் இளைஞர்கள் சமாதானமாகத் தயாரில்லை. மாறாக அவர்கள் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்கிறார்கள். கேரளா சட்டசபையில் மீண்டும் பெரும்பான்மை பெறமுடியும் என்ற இடது ஜனநாயக முன்னணியின் (எல்டிஎஃப்) நம்பிக்கைக்கு இது ஒரு பலத்த அடிதான். சபரிமலைப் பிரச்சினையைத் தவிர, ஆளுங்கட்சிக் கூட்டணிக்கு எதிராகத் தேர்தல் பரப்புரையில் பேசுவதற்குத் தேவையான பிரச்சினை எதையும் இதுவரை அடையாளங்காண முடியாமல் இருந்தது ஐக்கிய ஜனநாயகக் கூட்டணி (யூடிஎஃப்).

இப்போது அரசு செய்த ’பின்வழி நியமனங்கள்’ என்பதைப் பெரும் தேர்தல் பிரச்சினையாகக் கொண்டு செல்லலாம் என்ற நம்பிக்கை பிறந்திருக்கிறது யூடிஎஃப்-க்கு. அதன் இளைஞர் பிரிவுகளான இளைஞர் காங்கிரஸ், கேஎஸ்யூ, யூத் லீக், மற்றும் எம்எஸ்எஃப் ஆகிய இயக்கங்கள் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் இந்தப் போராட்டத்திற்குத் தலைமை தாங்கிக் கொண்டு அதை நடத்திக் கொண்டிருக்கிறது.

பிரதிமைத் தொழில்நுட்ப வளர்ச்சி மையத்தில் இருந்த 114 தற்காலிக ஊழியர்களின் பணியை நிரந்தரமாக்கிய அரசின் தீர்மானத்தில் இருந்துதான் பிரச்சினை ஆரம்பித்தது. தூதரகத் தங்கக் கடத்தல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவரான ஸ்வப்னா சுரேஷை அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையில் நியமனம் செய்த விவகாரம் வெளிவந்த போதுதான், பின்வழி நியமனங்கள் மற்றும் வேண்டியவர்களுக்குச் செய்த சலுகை ஆகிய விவகாரங்கள் சூடுபிடிக்க ஆரம்பித்தன. பின்னால் அரசு கொடுத்த விளக்கம் பின்வருமாறு இருந்தது.

ஸ்வப்னா அரசால் நியமிக்கப் பட்டவர் அல்ல; அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையிலும் நியமிக்கப் பட்டவர் அல்ல. மாறாகத் தகவல் தொழில்நுட்பத் துறையின் வேலைகளை ஒப்பந்த முறையில் மேற்கொண்ட ஒரு வெளியார் ஏஜென்சியின் ஊழியராக நியமிக்கப் பட்டவர் அவர். என்றாலும், தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட எம் சிவசங்கர் என்னும் முன்னாள் அரசுத் தலைமைச் செயலரோடு ஸ்வப்னா கொண்டிருந்த தொடர்புகள் அரசின் தன்னிலை விளக்கத்தைச் சந்தேகத்திற்கு உள்ளாக்கின. அரசுத் துறைகளில் நிகழும் தற்காலிக நியமனங்களில் இது போன்ற முறைகேடுகள் நடக்கத்தான் செய்யும் என்று யூகங்கள் கிளம்ப ஆரம்பித்தன.

எரியும் நெருப்புக்கு நெய் வார்த்தது போல, சூரிய மின்சக்தி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட சரிதா நாயரின் இரண்டு ஒலிப்பேழைகள் கசிந்தன. அரசாங்கத்தில் நிகழும் பின்வழி நியமனங்களைப் பற்றிய தரவுகளை அவை வெளியிட்டன. கசிந்த ஒலிப்பேழைகள் (பதிவு நேரம், குரலின் நிஜத்தன்மை ஆகியவற்றை ஈடிவி பாரத்தால் பரிசோதிக்க முடியவில்லை) எப்படி சரிதா நாயர் தான் உதவிய அரசியல் கட்சியோடு தொடர்புகளைப் பேணிக்காத்தார் என்பதையும், பெவ்கோ, ஆரோக்கிய கேரளம் மிஷன் ஆகிய அரசுத் துறைகளில் பின்வழி நியமனங்களை அமைப்பதற்கு எப்படி அவர் அரசு அதிகாரிகளின் தொடர்புகளைப் பயன்படுத்தினார் என்பதையும் அம்பலமாக்கின.

அந்த மாதிரியான நியமனங்களுக்காகத் தான் திரட்டிய பணத்தில் 60 விழுக்காடு ’கட்சி நிதி’க்கும், சில பகுதி அதிகாரிகளுக்கும் போய்விடும் என்றும் அவர் வேதனையோடு சொல்லியிருக்கிறார். அரசுவேலை ஊழல் வழக்கிலும் அவர் குற்றஞ் சாட்டப்பட்டவர். பின்வழி நியமனத்திற்காக மொத்தம் ரூபாய் 21 லட்சம் அவர் திரட்டினார், ஆனால் சொன்னபடி யாருக்கும் அவர் வேலை வாங்கித் தரவில்லை என்பது அவர்மேல் வைக்கப்பட்ட குற்றச்சாட்டு.

சூரிய மின்சக்தி ஊழல் 2016-ல் யூடிஎஃப்-க்கு எதிராக இருந்த தேர்தல் பரப்புரை விவகாரம். அப்போதிருந்த முதலைமைச்சர் ஊமண் சாண்டியும், பிற அமைச்சர்களும் ஊழல், மற்றும் பாலியல் சுரண்டல் குற்றச்சாட்டுகளில் சிக்கினர். ஆனாலும் அந்த வழக்கு இப்போதைய அரசால் சாட்சிப் பற்றாக்குறையால் கைவிடப் பட்டது. எனினும், சரிதா எஸ் நாயரால் தொடுக்கப்பட்ட பாலியல் சீண்டல் வழக்கு இன்னும் விசாரணையில் இருக்கிறது.

இந்தத் தடவை தேர்தல் என்னும் மேஜைமீது எல்டிஎஃப் வைக்கத் திட்டமிட்டிருக்கும் கார்டுகள் முன்னேற்றம், சமூக நலன் திட்டங்கள், மற்றும் ஊழலற்ற நிர்வாகம் ஆகியவைதான். ஆனால் தற்காலிக நியமனங்களில் ஊழல், பாரபட்சம், சட்ட விரோதமாகப் பணி நிரந்தரமாக்குதல் ஆகிய குற்றச்சாட்டுகள் எதிர்கார்டுகளாக வைக்கப்பட இருக்கின்றன. கடுமையான அந்தக் குற்றச்சாட்டுகளிலிருந்து சுத்தமாக வெளிவந்து தன்னைக் காத்துக் கொள்வதற்கு எல்டிஎஃப் புதிய தந்திரோபாயத்தைக் கண்டுபிடிக்க வேண்டும்.

யூடிஎஃப் தேர்தலை அணுகும் முறை எல்டிஎஃப்-க்கு ஆனந்தத்தைத் தருகிறது. காங்கிரஸில் பிரிவினைக் குழுக்களால் உட்கட்சிப் பூசல் டாப் கியரில் போய்க் கொண்டிருக்கிறது. அந்தக் கூட்டணியில் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் தலைமைப் பங்கு வகிக்கிறது. தீவிரவாத மதக்குழுக்களான வெல்ஃபேர் பார்ட்டி, ஸ்டிபிஐ ஆகியவற்றோடு தொடர்பு கொண்டிருக்கும் யூடிஎஃப் கூட்டணி பலகீனமாகத்தான் இருக்கிறது.

யூடிஎஃப்-பின் வழிவழியான வாக்கு வங்கியை கடந்த உள்ளாட்சித் தேர்தலில் பிடித்ததைப் போலவே சட்டசபைத் தேர்தலில் பிடிக்க முடியும் என்று எல்டிஎஃப் நம்பிக் கொண்டிருக்கிறது. ஆனாலும் பின்வழி நியமனங்களை எதிர்த்து இளைஞர்கள் நடத்தும் தெருப் போராட்டங்களும், யூடிஎஃப்-பும், பாஜகவும் இதைத் தங்களுக்கான தேர்தல் பரப்புரையின் கச்சாப்பொருளாகப் பார்க்கின்ற நோக்கும் எல்டிஎஃப்-பின் நம்பிக்கைகளுக்குப் பெரும் பின்னடைவுதான்.

பின்வழி அரசு நியமனங்கள் கடந்த யூடிஎஃப் ஆட்சியின் போதும் நிகழ்ந்தன என்பதற்கு ஆதாரங்கள் இப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பது எல்டிஎஃப்-க்கு ஆறுதல் தரக்கூடிய ஒரேவொரு விசயம். சில ஆவணங்கள் கசிந்திருக்கின்றன (அவற்றின் உண்மைத்தன்மையை ஈடிவி பாரத்தால் பரிசோதிக்க முடியவில்லை). கடந்த 2013, 2014, 2015 ஆண்டுகளில் பல்வேறு அரசுத் துறைகளில் பின்வழி நியமனங்கள் செய்யப்பட்டிருக்கின்றன என்றும், வெறும் ஐந்து வருட அனுபவம் கொண்ட ஊழியர்களின் பணிநியமனம் நிரந்தரமாக்கப் பட்டது என்றும் அந்த ஆவணங்கள் குற்றஞ்சாட்டி இருக்கின்றன.

வார்த்தைகளின் போரை, தரவுகளின் போரை, புள்ளிவிவரங்களின் போரை வெகுவிரைவில் கேரளா பார்க்கப் போகிறது. விவாதங்களால், எதிர்விவாதங்களால் மக்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகி தேர்தல் போர்க்களத்தில் இறுதியில் எந்த அணி வெல்லப் போகிறது என்பதைப் பொறுத்துத்தான் பார்க்க வேண்டும்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.