கரோனா தொற்றின் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த தேஜஸ் ரயில் சேவையானது, பண்டிகை காலத்தை முன்னிட்டு கடந்த அக். 17ஆம் தேதி மீண்டும் தொடங்கப்பட்டன.
வைரஸ் (தீநுண்மி) பரவுவதைத் தடுக்க அனைத்து COVID-19 நெறிமுறைகளும் பின்பற்றப்படும் என்று பயணிகளுக்கு ஐ.ஆர்.சி.டி.சி உறுதியளித்தது. அனைத்து பயணிகளுக்கும் மாஸ்க், சானிடைசர், கையுறைகள் அடங்கிய COVID-19 பாதுகாப்பு கிட் வழங்கப்படும். ரயிலில் ஏறுவதற்கு முன்பு அனைவருக்கும் வெப்ப பரிசோதனை நடைபெறும் என குறிப்பிட்டிருந்தனர். இருப்பினும், மக்களின் வருகை குறைந்த அளவிலே காணப்பட்டதாகக் கூறப்படுகிறது. 25 விழுக்காடு இருக்கைகள் மட்டுமே நிரம்பியதாக தெரிகிறது.
இதைக் கருத்தில்கொண்டு, லக்னோ- புது டெல்லி மற்றும் மும்பை-அகமதாபாத் ஆகிய வழித்தடங்களில் இயங்கும் இரண்டு தேஜஸ் ரயில்களும் ரத்து செய்யப்படுவதாக ஐஆர்சிடிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. எதிர்காலத்தில் பயணிகளின் வருகை அதிகரிக்கும் பட்சத்தில் மீண்டும் ரயில்களின் சேவை தொடங்கும் எனக் குறிப்பிட்டுள்ளனர்