ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்ணயித்த 131 ரன்கள் இலக்கை நோக்கி குஜராத் டைடன்ஸ் அணி வீரர்கள் விளையாடி வருகின்றனர். 10 ஓவர்கள் முடிவில் குஜராத் டைடன்ஸ் அணி 2 விக்கெட்களை இழந்து 54 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரர் சுப்மன் கில் , ஹர்திக் பாண்ட்யா களத்தில் இருந்தனர். 10 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2 விக்கெட்களை இழந்து 71 ரன்கள் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
2022 ஐபிஎல் இறுதிப்போட்டி; பந்து வீச்சில் குஜராத்துக்கு டப் கொடுக்கும் ராஜஸ்தான் - hardik pandya
22:49 May 29
10 ஓவர்கள் முடிவில் குஜராத் 54/2
22:29 May 29
பவர் பிளேயில் 2 விக்கெட்டுகளை இழந்து குஜராத் தடுமாற்றம்
ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்ணயித்த 131 ரன்கள் இலக்கை நோக்கி குஜராத் டைடன்ஸ் அணி வீரர்கள் விளையாடி வருகின்றனர். பவர் பிளேயில் குஜராத் அணி சாஹா, மேத்யூ வேட் ஆகியோரின் விக்கெட்களை இழந்து 31 ரன்கள் எடுத்துள்ளது. மேத்யூ வேட் போல்ட் பந்து வீச்சில் 8 ரன் மட்டுமே எடுத்து அவுட்டானார்.
22:18 May 29
பிரஷித் கிருஷ்ணா பந்துவீச்சில் சாஹா அவுட்
15வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் 131 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய குஜராத் டைடன்ஸ் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சிகரமாக அமைந்தது. பிரஷித் கிருஷ்ணா பந்து வீச்சில் தொடக்க வீரர் சாஹா போல்டாகி 5 ரன்னில் ஆட்டமிழந்தார்.
21:52 May 29
ராஜஸ்தானை 130 ரன்களில் அடக்கிய குஜராத் பந்துவீச்சாளர்கள்
ஐபிஎல் இறுதிப்போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக பட்லர் 39 ரன்கள் எடுத்தார். குஜராத் தரப்பில் ஹர்திக் பாண்ட்யா 3 விக்கெட்களும் , சாய் கிஷோர் 2 விக்கெட்களும் , ரஷீத் கான் ,யாஷ் தயால் மற்றும் முகமது ஷமி தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
21:31 May 29
சாய் கிஷோரின் சுழலில் சிக்கிய ராஜஸ்தான் வீரர்கள்
ஐபிஎல் இறுதிப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இதில் குஜராத் டைடன்ஸ் அணிக்காக விளையாடி வரும் தமிழகத்தை சேர்ந்த சாய் கிஷோர் 2 விக்கெட்களை வீழ்த்தினார். சாய் கிஷோரின் பந்து வீச்சில் அஷ்வின் 6 ரன்னிலும் , போல்ட் 11 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
21:23 May 29
போட்டியை நேரில் ரசிக்கும் அமித் ஷா
ஐபிஎல் இறுதிப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இந்த நிலையில் போட்டியை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது மனைவியுடன் நேரில் கண்டு களித்து வருகிறார்.
21:13 May 29
ராஜஸ்தானின் நம்பிக்கை நாயகன் பட்லரும் அவுட்
ஐபிஎல் இறுதிப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்துவருகிறது. குஜராத் டைடன்ஸ் வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ராஜஸ்தான் பேட்ஸ்மேன்கள் திணறி வருகின்றனர். நம்பிக்கை நாயகன் பட்லரும் ஹர்திக் பாண்ட்யாவின் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் சாஹாவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். பட்லர் 35 பந்துகளை எதிர்கொண்டு 39 ரன்கள் எடுத்தார்.
21:04 May 29
ரஷீத் கான் பந்து வீச்சில் பெவிலியன் திரும்பிய படிக்கல்
ஐபிஎல் இறுதிப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்துவருகிறது. 10 பந்துகளை எதிர்கொண்ட ராஜஸ்தான் வீரர் தேவ்தத் படிக்கல் 2 ரன் மட்டுமே எடுத்து ரஷீத் கான் பந்து வீச்சில் பெவிலியன் திரும்பினார். அவுட்சைட் ஆப் திசையில் வந்த பந்தை கட் செய்ய முயன்று ஷமியிடம் கேட்ச் கொடுத்து படிக்கல் ஆட்டமிழந்தார்
21:04 May 29
ராஜஸ்தான் கேப்டனை காலி செய்த குஜராத் கேப்டன்
ஐபிஎல் இறுதிப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்துவருகிறது. 10 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2 விக்கெட்களை இழந்து 71 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்ஸன்; குஜராத் டைடன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்து வீச்சில் சாய் கிஷோரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். சஞ்சு சாம்ஸன் 11 பந்துகளில் 14 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
20:39 May 29
அதிவேகமாக பந்து வீசி மிரட்டிய லாக்கி பெர்குசன்
ஐபிஎல் இறுதிப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இதில் குஜராத் டைடன்ஸ் வீரர் லாக்கி பெர்குசன் வீசிய பந்து தொடரின் அதிவேக பந்தாக பதிவாகி உள்ளது. ஜாஸ் பட்லருக்கு லாக்கி பெர்குசன் வீசிய பந்தின் வேகம் 157.3 கிமீ ஆக பதிவானது. இதற்கு முன்னதாக சன்ரைசர்ஸ் வீரர் உம்ரான் மாலிக் 157 கி.மீ. வேகம் பந்து வீசினார்.
20:28 May 29
பவர் பிளே முடிவில் ராஜஸ்தான் அணி 45 ரன்கள் சேர்ப்பு
ஐபிஎல் இறுதிப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. பவர் பிளே முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 45 ரன்கள் சேர்த்துள்ளது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் 22 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தற்போது பட்லர் , கேப்டன் சஞ்சு சாம்ஸன் களத்தில் உள்ளனர். பவர் பிளேயில் ராஜஸ்தான் அணியின் ரன் ரேட் 7க்கும் மேல் இருந்தது.
20:18 May 29
முதல் விக்கெட்டை இழந்தது ராஜஸ்தான் ராயல்ஸ்!
ஐபிஎல் இறுதிப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. தொடக்க வீரராக களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் சிறிது நேரம் அதிரடி காட்டினார். இதையடுத்து யாஷ் தயால் பந்துவீச்சில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்தார், அவர் 16 பந்துகளில் ஒரு பவுண்டரி , 2 சிக்ஸர் விளாசி 22 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார்.
20:05 May 29
இரு அணிகளின் பிளேயிங் 11 விவரம்!
குஜராத் டைடன்ஸ் : விருத்திமான் சாஹா , சுப்மன் கில், மேத்யூ வேட், ஹர்திக் பாண்டியா , டேவிட் மில்லர், ராகுல் திவாட்டியா , ரஷித் கான், சாய் கிஷோர், லாக்கி பெர்குசன், யாஷ் தயால், முகமது ஷமி.
ராஜஸ்தான் ராயல்ஸ் : யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன் , தேவ்தத் பாடிக்கல், ஹெட்மியர், ரியான் பராக், ரவிச்சந்திரன் அஷ்வின், போல்ட், பிரசித் கிருஷ்ணா, ஓபேட் மெக்காய், யுஸ்வேந்திர சாஹல்.
19:38 May 29
டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங் தேர்வு
15ஆவது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் ராஜஸ்தான் ராயஸ்ல் அணி டாஸை வென்றது. டாஸ் வென்ற கேப்டன் சஞ்சு சாம்ஸன் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் பிளேயிங் 11இல் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. குஜராத் டைடன்ஸ் அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அல்சாரி ஜோசப்பிற்கு பதிலாக லாக்கி பெர்குசன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
19:20 May 29
பிரமாண்ட ஐபிஎல் ஜெர்ஸிக்கு கின்னஸ் விருது
முன்னதாக மிகப்பெரிய ஐபிஎல் ஜெர்ஸி வெளியிடப்பட்டது. ஜெர்ஸியில் 10 அணிகளின் சின்னங்கள் பொறிக்கப்பட்டு இருந்தன. ஜெர்ஸி 66 மீட்டர் நீளமும் 42 மீட்டர் அகலமும் கொண்டதாகும். அந்த ஜெர்ஸி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்ததை அடுத்து பிசிசிஐ தலைவர் கங்குலி மற்றும் செயலாளர் ஜெய் ஷாவிடம் சாதனைச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
19:06 May 29
வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடிய ரன்வீர் சிங்
கலை விழாவின் தொடக்கத்தில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கின் நடன நிகழ்ச்சி இடம் பெற்றிருந்தது. எதிர்பார்த்தது போலே தனது நடனத்தால் ரன்வீர் சிங் ரசிகர்களை கவர்ந்தார், அப்போது உலகம் முழுவதும் ஹிட் அடித்த வாத்தி கம்மிங் பாடலுக்கு வெறித்தனமாக ரன்வீர் சிங் நடனமாட ரசிகர்களின் கரகோஷத்தால் அரங்கமே அதிர்ந்தது.
18:36 May 29
ஐபிஎல் திருவிழா - ஆட்டம் பாட்டத்துடன் இறுதிப்போட்டி கோலாகலமாக தொடங்கியது.
அகமதாபாத் (குஜராத்): 50க்கும் மேற்பட்ட நாள்களாக கிரிக்கெட் ரசிகர்களை குஷிப்படுத்தி வந்த 15ஆவது ஐபிஎல் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இன்று (மே 29) குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் இறுதி போட்டியில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைடன்ஸ் - சஞ்சு சாம்ஸன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.
கரோனா தாக்கம் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக நிறைவு விழா நடைபெறாத நிலையில், தற்போது மீண்டும் வண்ண கலை நிகழ்ச்சிகளுடன் இறுதிப்போட்டியை பிசிசிஐ நடத்துகிறது. போட்டியை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மைதானத்தில் திரண்டுள்ளனர்.