ETV Bharat / bharat

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்திற்கு சம்மன் - கார்த்தி சிதம்பரம்

டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு டெல்லி நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு
author img

By

Published : Mar 24, 2021, 11:32 PM IST

ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம், வெளிநாட்டிலிருந்து 305 கோடி ரூபாய் முதலீடு பெறுவதற்கு, மத்திய வெளிநாட்டு முதலீட்டு மேம்பாட்டு வாரியம் அனுமதி அளித்ததில் முறைகேடு நடந்திருப்பதாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு எதிராக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு குறித்து அமலாக்கத்துறை தானாக முன்வந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ள நிலையில், சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு டெல்லி நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

வரும் ஏப்ரல் 7ஆம் தேதி, நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என சிறப்பு நீதிபதி எம்கே நாக்பால் உத்தரவிட்டுள்ளார். ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக கடந்த 2019ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 21ஆம் தேதி, சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தது. அதைத் தொடர்ந்து, அக்டோபர் 16ஆம் தேதி, அவரை அமலாக்கத்துறை கைது செய்தது. இதனிடையே, சிதம்பரத்திற்கு உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.