ETV Bharat / bharat

பயோமெட்ரிக் இயந்திரம் மூலம் ரயில் டிக்கெட் - Secunderabad Junction

தெலங்கானா மாநிலத்தில் உள்ள செகந்திராபாத் ரயில் நிலையத்தில் டிக்கெட் வழங்கும் பயோமெட்ரிக் டோக்கன் இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ரயில் டிக்கெட்
ரயில் டிக்கெட்
author img

By

Published : Sep 23, 2021, 12:59 PM IST

ஹைதராபாத்: பொதுமக்கள் வெளியூர் செல்வதற்கு அதிகம் பயன்படுத்தும் போக்குவரத்து சேவை ரயில்வே சேவைதான், இதில்தான் பயணக் கட்டணம் குறைவு, பாதுகாப்பு அதிகம், தொலைதூர பயண வசதி என பல வசதிகள் உள்ளன.

ரயில் சேவையை பொறுத்தவரை முன்பதிவு செய்பவர்களுக்கு எந்த பிரச்சினையும் கிடையாது, ரயில் கிளம்பும் ஐந்து நிமிடத்திற்கு முன்புகூட இருக்கை பார்த்து அமர்ந்துகொள்ளலாம். ஆனால் இதில் அதிகம் சிக்கிக்கொள்பவர்கள் முன்பதிவு செய்யப்படாத ஜென்ட்ரல் கோச் பயணிகள்தான்.

இந்த பொதுப்பெட்டியில் பயணிப்பவர்கள் இரண்டு மணி நேரத்திற்கு முன்னமே வந்து வரிசையில் நின்று பயணச்சீட்டுகளை வாங்கிச் செல்ல வேண்டும். சிலர் இதுபோன்ற காரணத்தால் பயணிக்க முடியாத சூழலும் ஏற்பட்டுள்ளது.

இந்த சிக்கல்களை சரிசெய்யும் வகையில், தென் மத்திய ரயில்வே மண்டலம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலத்தில் உள்ள செகந்திராபாத் ரயில் நிலையத்தில் டிக்கெட் வழங்கும் பயோமெட்ரிக் டோக்கன் இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த பயோமெட்ரிக் இயந்திரம், பயணிகளின் தகவல்களான புகைப்படம் , கைரேகை போன்றவற்றை பெற்றுக் கொள்கிறது. இதன்மூலம் ரயில்களில் ஏற்படும் குற்றச்சம்பவங்களை எளிதில் கண்டறிய முடியும் என தென் மத்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: நகைக்கடன் தள்ளுபடி: முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.