20 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றிய தாலிபான்கள்
ஆகஸ்ட் 16இல் ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகளைத் திரும்பப்பெறுவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்த பின்னர் பத்து நாள்கள் பெரும் போருக்குப் பின்னர், 24 மணி நேரத்தில் தாலிபான்கள் கைகளில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விழுந்தது. அமெரிக்க தயவில் ஆட்சி செலுத்திய அஷ்ரப் கானியின் 20 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்தது.
![காபுலைக் கைப்பற்றிய தாலிபான்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14057692_thalibhan.jpg)
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி
நவம்பர் 3இல் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில், அமெரிக்காவின் 46ஆவது அதிபராக ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பெரும்பான்மைக்கு 270 வாக்குகள் தேவை என்ற நிலையில், பைடன் 284 வாக்குகள் பெற்று வெற்றியடைந்தார். இதன்மூலம் தமிழ்நாட்டைப் பூர்விகமாகக் கொண்ட கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபரானார்.
![ஜோ பைடன்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14057692_joebiden.jpg)
பிரபஞ்ச அழகி: 21 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியர் வெற்றி
டிசம்பர் 13இல் இஸ்ரேல் யெலாத் நகரில் 70ஆவது பிரபஞ்ச அழகிப் போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளிலிருந்து சுமார் 80 பேர் கலந்துகொண்டனர். இதில், இந்தியாவின் சார்பாக பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த நடிகையும், மாடலுமான ஹர்னாஸ் சாந்து (21) கலந்துகொண்டு பட்டம் வென்றுள்ளார்.
![ஹர்னாஸ் கவுர்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14057692_harnaaz.jpg)
இதன்மூலம் சுமார் 21 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபஞ்ச அழகிப் பட்டம் இந்தியாவிற்கு கிடைத்துள்ளது. முன்னதாக இந்தப் பட்டத்தை 1994ஆம் ஆண்டு சுஷ்மிதா சென்னும், 2000ஆம் ஆண்டு லாரா தத்தாவும் வென்றனர்.
விண்ணில் ஏவப்பட்ட நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி
டிசம்பர் 25இல் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, உலகின் மிகப்பெரிய விண்வெளி தொலைநோக்கியான ’ஜேம்ஸ் வெப்’ விண்வெளி தொலைநோக்கியைப் பிரான்ஸ் கயானாவிலிருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.
![ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14057692_james.jpeg)
இந்தத் தொலைநோக்கிக்கு 1960-களில் நாசாவின் நிர்வாகியாக இருந்த ஜேம்ஸ் வெப்பின் பெயரிடப்பட்டது. 1990ஆம் ஆண்டு முதலே 29 நாடுகளைச் சேர்ந்த அறிவியலாளர்கள் இதற்கான பணியைத் தொடங்கிவிட்டனர். 30 ஆண்டுகள் முடிவில் 7 டன் எடைகொண்ட இந்தத் தொலைநோக்கி உருவாக்கப்பட்டது.
டோக்கியோ ஒலிம்பிக்: அதிக பதக்கங்கள் குவித்து இந்தியா சாதனை
ஆகஸ்ட் 8இல் நடந்து முடிந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில், இந்தியா ஒரு தங்கம், இரண்டு வெள்ளி, நான்கு வெண்கலம் என ஏழு பதக்கங்களை வென்றது.
![டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் மெடல் வென்ற இந்தியர்கள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14057692_tokyo.jpg)
ஹரியானாவைச் சேர்ந்த நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப் பதக்கமும், பளு தூக்கும் போட்டியில் மணிப்பூரைச் சேர்ந்த மீரா பாய் வெள்ளிப் பதக்கமும், மல்யுத்தப் போட்டியில் ஹரியானாவைச் சேர்ந்த ரவிக்குமார் வெள்ளிப் பதக்கமும், அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த லவ்லினா போர்கோஹியான் குத்துச்சண்டையில் வெண்கலப் பதக்கமும், பி.வி. சிந்து ஒரு வெண்கலப் பதக்கமும் என ஏழு பதக்கங்களை வென்றனர்.
ட்விட்டர் சிஇஓவாக இந்தியாவைச் சேர்ந்த பரக் அகர்வால் தேர்வு
நவம்பர் 29இல் பிரபல சமூக வலைதளமான ட்விட்டர் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஜாக் டோர்சி (Jack Dorsey) சிஇஓ பொறுப்பில் இருந்து விலகிய நிலையில், அடுத்ததாக இந்தியாவைச் சேர்ந்த பராக் அகர்வால் அப்பொறுப்பை ஏற்பார் என ட்விட்டர் நிறுவனம் அறிவித்தது.
![ட்விட்டர் சீஇஓ பராக் அகர்வால்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14057692_parag.jpg)
UNSC கவுன்சிலில் நிரந்தரமற்ற உறுப்பினராக இந்தியா
ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு UNSC கவுன்சிலில் நிரந்தரமற்ற உறுப்பினராக இந்தியா தனது இரண்டு ஆண்டு பதவிக்காலத்தை ஜனவரி 1, 2021 அன்று தொடங்கியது.
![UNSC கவுன்சில்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14057692_unsc.jpg)
இளவரசர் ஹாரி, அவரது மனைவி மேகன் பிரிட்டிஷ் அரச குடும்பத்தின் அந்தஸ்தை விட்டுக்கொடுக்க முடிவு
ஜனவரி 8 பிரிட்டிஷ் இளவரசர் ஹாரி, அவரது அமெரிக்க மனைவி மேகன் தங்களது பிரிட்டிஷ் அரச குடும்பத்தின் தகுதியை விட்டுக்கொடுக்கும் முடிவை அறிவித்தனர். அரச குடும்பத்திலிருந்து தங்களை விலக்கிக்கொண்ட ஹாரி, அமெரிக்காவின் கலிஃபோர்னியா நகருக்கு குடியேறினர்.
![இளவரசர் ஹாரி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14057692_prince.jpg)
இளவரசர் ஹாரியும், அவரது மனைவி மேகனும் பொருளாதார சுதந்திரத்தைப் பெறுகிறவகையில் முழுநேர பணிக்குச் செல்லவும், சொந்த காலில் நிற்பதற்காகத் திட்டமிட்டு இதைச் செய்ததாகத் தெரிவித்தனர். இவர்களின் இந்த முடிவு உலகெங்கும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது.
'எவர் கிவன்' சரக்குக் கப்பல் எகிப்தில் உள்ள குறுகிய சூயஸ் கால்வாயில் சிக்கியது
மார்ச் 2021, எவர் கிவன் என்னும் 400 மீட்டர் சரக்கு கப்பல் சூயஸ் கால்வாயில் சிக்கியது உலகெங்கும் பெறும் பொருளாதாரச் சரிவை ஏற்படுத்தியது.
![எவர் கிவன் சரக்குக் கப்பல்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14057692_evergiven.jpg)
ஆறு மாத கால நீண்ட போராட்டத்தின் பின்னர் சிக்கிய கப்பலை மீட்டெடுத்தனர். பல போராட்டங்களுக்குப் பின் விடுவிக்கப்பட்ட இந்த ’எவர் கிவன்’ கப்பல் நெதர்லாந்து நோக்கி தனது பயணத்தைத் தொடங்கியது.
விண்வெளிப் பயணம் (Space Tourism) சாத்தியமானது!
ஜூலை 20இல் ’நியூ செப்பர்ட்’ என்னும் விண்கலத்தின் மூலம் விண்வெளிப் பயணம் சாத்தியமானது. இதன் இளம் பயணி 18 வயது நிரம்பிய டட்ச் மாணவராவார், மேலும் மூன்று மாதங்கள் கழித்து மீண்டும் விண்வெளியில் பறந்த ’புலூ ஒரிஜின்’ விண்கலத்தில் பயணித்த 90 வயதை எட்டிய கனடிய நடிகர் வில்லியம் சாட்னர் இதில் பயணிக்கும் மிக முதுமையான நபரானார் என்பது குறிப்பிடத்தக்கது.
![புலூ ஒரிஜின் விண்களம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14057692_newshepherd.jpg)
பெகாசஸ் அதிர்ச்சியூட்டும் தகவல்
ஜூலை 19 பெகாசஸ் என்பது இஸ்ரேலிய நிறுவனமான என்.எஸ்.ஓ. குழுமத்தால் உருவாக்கப்பட்ட ஒரு ஸ்பைவேர் ஆகும், இதை வல்லுநர்கள் சைபர் ஆயுதங்கள் என்றும் அழைக்கிறார்கள். இது குறித்து என்.எஸ்.ஓ. நிறுவனத்தின் மேல் ஃபேஸ்புக் வழக்குத் தொடர்ந்த நிலையில்,பெகாசஸ் இருப்பதை என்எஸ்ஓ குழுமம் உறுதிப்படுத்தியது.
![பெகாசஸ் ஸ்பைவேர்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14057692_spyware.jpg)
இருப்பினும், இந்த இஸ்ரேலிய நிறுவனம் டூல்களை அரசாங்கங்களுக்கு மட்டுமே விற்கிறது என்றும், அதன் தவறான பயன்பாட்டிற்கு அது பொறுப்பல்ல என்றும் கூறியது.
பண்டோரா பேப்பர்ஸ்: டெண்டுல்கர், அனில் அம்பானி, நீரவ் மோடி, ஜாக்கி ஷெராஃப் பெயர்கள்
2015ஆம் ஆண்டு பனாமா ஆவணங்கள் (Panama Papers) வெளியாகி உலகளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் 2021இல் பண்டோரா ஆவணங்கள் (Pandora Papers) வெளியாகின.
![பண்டோரா பேப்பர்ஸ்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14057692_pandorapapers.jpg)
அக்டோபர் 3ஆம் தேதி வெளியிடப்பட்ட இந்தப் பண்டோரா ஆவணங்களில், உலகத் தலைவர்களின் அறியப்படாத பண மோசடிகள், சட்டவிரோத பரிவர்த்தனைகள், வெளிநாடுகளில் பினாமி சொத்துகள் ஆகியவற்றை வெளிப்படுத்தியது. அறிக்கையில், சச்சின் டெண்டுல்கர், நீரவ் மோடி உள்பட 91 நாடுகளைச் சேர்ந்த 330-க்கும் மேற்பட்ட அரசியல்வாதிகளும் இடம்பெற்றனர்.
இந்தியாவின் முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் மரணம்
டிசம்பர் 8இல் குன்னூரில் ஏற்பட்ட ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் தன் மனைவி உள்பட 13 ராணுவ வீரர்களுடன் பயணித்த பிபின் ராவத் உள்பட யாவரும் அகால மரணமடைந்தனர்.
![இந்திய முப்படைத் தளபதி பிபின் ராவத்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14057692_bipin.jpg)
இவரின் மரணம் இந்திய அளவிலும், உலக அலவிலும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது.
பன்னாட்டு விண்வெளி நிலையத்தில் எடுக்கப்படும் ரஷிய படம்
அக்டோபர் மாதத்தில் பன்னாட்டு விண்வெளி நிலையத்தில் எடுக்கப்படும் முதல் திரைப்படமான 'தி சேலஞ்ச்' என்கிற ரஷ்ய மொழிப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.
இந்தத் திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு 12 நாள்கள் பன்னாட்டு விண்வெளி நிலையத்தில் எடுக்கப்பட்டது. இந்தத் திரைப்படத்தை இயக்குநர் கிலிம் சிபெங்கோ இயக்குகிறார்.
இதையும் படிங்க:2021 Recap - நம்மை விட்டு பிரிந்த திரை பிரபலங்கள்