இது பற்றி புதுச்சேரி மாநில தொழிலாளர் துறையின் ஆணையர் சுந்தரேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அடுத்த பத்து நாள்களுக்குள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.
குறிப்பாக, புதுச்சேரியில் உள்ள தொழில் நிறுவன அதிபர்கள், பணியாளர்கள், தொழிலாளர்கள், கடை வியாபாரிகள், உணவக ஊழியர்கள் - விடுதி, அலுவலகங்கள், தொழிற்சாலைகளில் பணிபுரியும் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை எனில் குறிப்பிட்ட தொழில் நிறுவனங்கள் இயங்காத நிலை ஏற்படும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.