ETV Bharat / bharat

மேகதாது - கர்நாடகாவுக்கு எதிராக கண்டன தீர்மானம் - pudhucheery news

மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு எதிராக கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

நாராயணசாமியின் வலியுறுத்தல்  முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமியின் வலியுறுத்தல்  Insistence of former Chief Minister Narayanasamy  ormer Chief Minister Narayanasamy  புதுச்சேரி செய்திகள்  pudhucheery news  pudhucheery latest news
நாராயணசாமியின் வலியுறுத்தல்
author img

By

Published : Jul 15, 2021, 12:38 PM IST

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “கர்நாடகம், தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி மாநிலங்களுக்கு காவிரி நதிநீரை பிரித்துக்கொடுப்பது தொடர்பாக பல ஆண்டுகளுக்கு பிறகு உச்சநீதிமன்ற தீர்ப்பு அளித்துள்ளது. அதனை நடைமுறைப்படுத்தாமல் கர்நாடகா அரசு காலம் தாழ்த்தி வருகிறது“.

“மேகதாது என்ற இடத்தில் கர்நாடக அரசு அணைகட்டுவதற்கான ஆயத்த வேலைகளை ஆரம்பித்து கட்டுமானப்பணிகளை முடுக்கிவிட்டது“.

“ உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில், காவிரி நதிநீர் வழிகளில் இடையூறின்றி தடுப்பணைகள் கட்டாமல் தண்ணீரை திறந்துவிட வேண்டும் என தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்கள் வலியுறுத்தி வருகின்றன“.

“எனவே அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி கர்நாடகா அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். மேலு‌ம் ஜூலை 16-ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என்று முதல்வர் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை“.

“குறிப்பாக 3வது அலை டெல்டா பிளஸ் குழந்தைகளை அதிகமாக தாக்கும் என்று மருத்துவ வல்லுநர்கள் கூறியுள்ளனர். புதுச்சேரி மாநிலம் இன்னொரு கரோனாவின் அலையை தாங்காது. ஆகவே பள்ளிகள் திறப்பது குறித்த முடிவை முதலமைச்சர் மறுபரிசீலனை செய்ய வேண்டும். இதன்மூலம் பள்ளி மாணவர்களையும், இளைஞர்களையும் நாம் காப்பாற்ற முடியும்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: கல்விக் கண் திறந்த காமராஜர்.. வாழ்வும்- வரலாறும்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.