நொய்டா: உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில், ராஜேஷ்-சப்னா தம்பதியினர் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்களது ஒரு வயது குழந்தை அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது மூன்று தெரு நாய்கள் அந்த குழந்தையை கடித்துள்ளன.
குழந்தையின் அலறல் சத்தம் கேட்ட பெற்றோர், உடனடியாக சென்று குழந்தையை மீட்டனர். பலத்த காயமடைந்த குழந்தை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. குழந்தையின் வயிற்றில் 25 இடங்களில் நாய் கடித்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் குழந்தை இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க மாநகராட்சியுடன் இணைந்து தேவையான நடவடிக்கைகளை எடுப்போம் என போலீசார் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:ஹெலிகாப்டர் விபத்தில் சென்னையை சேர்ந்த மூன்று பேர் உட்பட 7 பேர் பலி...