ETV Bharat / bharat

மாயமான இந்தோனேசிய நீர்மூழ்கிக் கப்பல்: எண்ணெய் படலங்கள் கண்டுபிடிப்பு! - இந்தோனேசிய நீர்மூழ்கிக் கப்பல்

மாயமான இந்தோனேசிய நீர்மூழ்கிக் கப்பல் காணாமல் போன இடத்தில் எண்ணெய் படலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மாயமான இந்தோனேசிய நீர்மூழ்கிக் கப்பல்: எண்ணெய் படலங்கள் கண்டுபிடிப்பு

author img

By

Published : Apr 24, 2021, 7:44 PM IST

இந்தோனேசியாவில் அமைந்துள்ள பாலி தீவிலிருந்து 25 மைல் வடக்கில் 53 பேர் கொண்ட குழுவினர் நீர்மூழ்கிக் கப்பலில் பயிற்சி மேற்கொண்டு வந்தனர். பயிற்சிக்குப் பின்னர், இக்கப்பல் மீண்டும் கரை திரும்பவில்லை.

ஏப்ரல் 21 அன்று சர்வதேச நீர்மூழ்கிக் கப்பல் மீட்பு அமைப்பு, காணாமல் போன இந்தோனேசியாவின் நீர்மூழ்கிக் கப்பல் குறித்து இந்திய கடற்படைக்குத் தகவல் அளித்தது. ஆழ்கடல் நீர்மூழ்கி மீட்பு கப்பலின் உதவியுடன் காணாமல் போகும் நீர்மூழ்கிக் கப்பலை கண்டுபிடிக்கும் ஒரு சில நாடுகளில் இந்தியாவிற்கும் முக்கிய இடமுண்டு.

இந்திய கடற்படையின் டிஎஸ்ஆர்வி-யின் நவீன தொழில்நுட்பக் கருவிகளினால், 1000 மீட்டர் ஆழம் வரை சென்று நீர்மூழ்கிக் கப்பலை கண்டறிய முடியும். இந்நிலையில், அமெரிக்க உளவு விமானமான பி -8 போஸிடான் இன்று(ஏப்.24) அதிகாலை தரையிறங்கியது.

மேலும் 20 இந்தோனேசிய கப்பல்கள், சோலார் பொருத்தப்பட்ட ஆஸ்திரேலிய போர்க்கப்பல் மற்றும் நான்கு இந்தோனேசிய விமானங்கள் காணாமல் போன கப்பலை தேடும் பணியில் ஈடுபட்டன.

சிங்கப்பூரும், மலேசியாவும் மீட்பு கப்பல்களை அனுப்புகின்றன என, இந்தோனேசிய இராணுவ செய்தித் தொடர்பாளர் ஜவாரா விம்போ தெரிவித்துள்ளார். காணாமல் போன நீர்மூழ்கிக் கப்பல் மூழ்கியதாகக் கருதப்படுகிற இடத்தில் எண்ணெய் படலம் கண்டறியப்பட்டுள்ளது.

இது அந்த கப்பலின் எண்ணெய் டேங்க் சேதம் அடைந்திருக்கலாம் என்பதின் வெளிப்பாடாக இருக்கலாம் எனத் தெரிவித்த கப்பற்படை தலைவர் மார்கோனா, கப்பலின் எடையைக் குறைக்க எரிபொருள் மற்றும் திரவங்களை குழுவினர் வெளியிட்டிருக்கலாம் என்றும் குறிப்பிட்டார்.

கப்பல் காணாமல் போனதற்கான காரணம் இன்னும் உறுதியாகக் கூறப்படவில்லை. மின் இணைப்பு இல்லாமல் நீர்மூழ்கிக் கப்பல் அவசர கால நடைமுறைகளை மீண்டும் செயல்படுத்த முடியாமல் போயிருக்கலாம் என்று கடற்படை தெரிவித்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.