டெல்லி: தலைநகர் டெல்லியில் இருந்து கத்தார் தலைநகர் தோஹாவுக்கு இண்டிகோ நிறுவனத்தின் விமானம் புறப்பட்டு சென்று உள்ளது. நடுவானில் பறந்து கொண்டு இருந்த விமானத்தில் திடீரென பயணி ஒருவருக்கு உடல் நலக் கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து விமானம் உடனடியாக பாகிஸ்தான் திருப்பி விடப்பட்டது.
-
Doha bound IndiGo flight diverted to Pakistan's Karachi due to a medical emergency onboard, says an airline official to ANI. pic.twitter.com/KuVJoIJmwm
— ANI (@ANI) March 13, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Doha bound IndiGo flight diverted to Pakistan's Karachi due to a medical emergency onboard, says an airline official to ANI. pic.twitter.com/KuVJoIJmwm
— ANI (@ANI) March 13, 2023Doha bound IndiGo flight diverted to Pakistan's Karachi due to a medical emergency onboard, says an airline official to ANI. pic.twitter.com/KuVJoIJmwm
— ANI (@ANI) March 13, 2023
கராச்சி விமான நிலையத்தில் இண்டிகோ விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தின் வருகைக்காக காத்திருந்த மருத்துவக் குழு, விமானத்தில் பயணித்த உடல் நலமற்ற பயணியை மீட்டு பரிசோதனை செய்தனர். பரிசோதனையில் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவக் குழு தெரிவித்து உள்ளது.
உயிரிழந்த பயணி நைஜீரியாவை சேர்ந்தவர் என்றும் 60 வயது மதிக்கத்தக்க நபர் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் அவர் குறித்த தகவல்களை விமான நிறுவனம் வெளியிடவில்லை. தொடர்ந்து பாதுகாப்பு சோதனைகள் நிறைவு பெற்ற நிலையில் பயணியின் சடலத்துடன் இண்டிகோ விமானம் மீண்டும் டெல்லியை நோக்கி வந்தடைந்தது.
இது தொடர்பாக இண்டிகோ விமான நிறுவனம் வெளியிட்டு உள்ள அறிக்கையில், "இந்தச் செய்தியால் நாங்கள் மிகவும் வருத்தமடைந்து உள்ளோம். பயணியை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினருக்கு எங்களது பிரார்த்தனைகள் மற்றும் இரங்கல்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து, விமானத்தின் மற்ற பயணிகளை மாற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம்" எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம், இதே போல் கேரள மாநிலம்ப் கொச்சினில் இருந்து இண்டிகோ விமானம் 6E 2407 டெல்லி நோக்கி சென்று கொண்டு இருந்தது. பாதி வழியில் பயணி ஒருவருக்கு திடீரென மருத்துவ சிகிசை தேவைப்பட்டது. மத்திய பிரதேச மாநிலம் போபாலில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, கொல்கத்தாவில் இருந்து பெங்களூரு நோக்கி சென்று கொண்டு இருந்த விமானத்தில் பெண் பயணி ஒருவர் கழிவறையில் அமர்ந்து சிகரெட் பிடித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. விமானத்தில் சிகரெட் துர்நாற்றம் வீசுவதை உணர்ந்த விமான சிப்பந்திகள் கழிவறையில் இருந்த குப்பைக் கூடையில் சிகரெட் துண்டை கைப்பற்றி உள்ளனர்.
பாதி அணையாமல் கிடந்த சிகரெட் துண்டை தண்ணீர் ஊற்றி அணைத்த விமான சிப்பந்திகள், இது தொடர்பாக விமானியிடம் புகார் அளித்து உள்ளனர். பெங்களூரு கெம்பகவுடா சர்வதேச விமான நிலையத்தில் விமானம் தரையிறங்க 30 நிமிடங்கள் இருந்த நிலையில், இந்த சம்பவம் நடந்தது சக பயணிகளிடையே பீதியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியது. இருப்பினும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இதையும் படிங்க: Oscar Award 2023: பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து!