துபாயின் ஷார்ஜாவிலிருந்து ஹைதராபாத் நோக்கி சென்று கொண்டிருந்த இண்டிகோ பயணிகள் விமானத்தில் திடீரென தொழில் நுட்பக்கோளாறு ஏற்பட்டது. இதை அறிந்த விமானி உடனடியாக கட்டுப்பாட்டு நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து, விமானம் பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. தொழில்நுட்ப கோளாறு குறித்து அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். ஹைதராபாத்திற்கு பயணிகளை ஏற்றிச்செல்ல கூடுதல் விமானம் கராச்சிக்கு அனுப்பப்படும் என இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேபோல், கடந்த 5ஆம் தேதி, டெல்லியிலிருந்து துபாய் சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, கராச்சி விமான நிலையத்தில் தரையிறங்கியது.
இதையும் படிங்க:விண்வெளியின் அற்புதப் புகைப்படங்களை எடுப்பதில் பங்காற்றிய 3 இந்தியப்பெண் விஞ்ஞானிகள்!