ETV Bharat / bharat

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 'இடைமறிப்பு படகு சி-454' இந்திய கடலோர காவல் படையில் இணைப்பு - குஜராத் மாநிலம் சூரத் நகர்

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அதிவேக இடைமறிப்பு படகான சி-454 ( C-454,), இந்திய கடலோர காவல் படையில் நேற்று (டிசம்பர் 15) இணைக்கப்பட்டது.

ந்திய கடலோர காவல்படை
ந்திய கடலோர காவல்படை
author img

By

Published : Dec 16, 2020, 3:21 PM IST

காந்திநகர் (குஜராத்) : கடல் வழி ஊடுருவல், சட்டவிரோதமான மீன் பிடிப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றை தடுப்பதற்காக அதிவேக இடைமறிப்பு படகுகள் பயன்படுத்தப்படுகின்றன. அந்ந வகையில், நம் நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இடைமறிப்பு படகான சி-454 இன்று (டிசம்பர் 16) இந்திய கடலோர காவல் படையில் இணைக்கப்பட்டது.

இந்த படகினை, எல் அன்ட் டி (L&T) தயாரித்துள்ளது. இது அந்நிறுவனத்தால் இந்திய கடலோர காவல் படைக்கு தயாரிக்கப்பட்டுள்ள 54ஆவது படகாகும். குஜராத் மாநிலம் சூரத் நகரில் நேற்று (டிசம்பர் 15) நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்திய கடலோர காவல் படையின் ஐஜி ராகேஷ் பால் மற்றும் அலுவலர்கள் முன்னிலையில் சூரத் காவல் ஆணையர் அஜய் தோபர் சி-454 படகினை இந்திய கடலோர காவல் படையில் இணைத்தார்.

படகின் செயல்திறன் குறித்த விளக்கம்:

இந்த படகு ஒரு மணி நேரத்தில் 80 கிலோ மீட்டர் தூரம்வரை பயணிக்கும் திறன் கொண்டது. இதன் மூலம் கடல் வழி ஊடுருவல், கடத்தல், சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் ஆகியவற்றை தடுக்க முடியும். இதுகுறித்து ஐஜி ராகேஷ் பால் கூறுகையில், " கார் இன்ஜினை போன்று இந்த படகின் இன்ஜினும் அதிவிரைவில் செயல்படத் தொடங்கும். ஆழ் கடலில் ஒரு மணி நேரத்தில் 80 கிலோமீட்டர் தூரம் பயணிக்கும் திறன் கொண்டது. இதன் மூலம் குஜராத் கடலோரப்பகுதிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது" என்றார்.

இதையும் படிங்க: விமான விபத்தில் உயிரிழந்த கமாண்டரின் உடலை கண்டுபிடித்த இந்திய கப்பல் படை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.