பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது சொந்த தொகுதியான உத்தரப்பிரதேசத்தில் உள்ள லக்னோவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.
அங்கு உட்கட்டமைப்பு பணிகளை ஆய்வு செய்த அவர் நாட்டின் வளர்ச்சிப் பணிகள் குறித்து தொகுதி மக்களிடம் பேசினார். அப்போது , "நாட்டின் முன்னணி மூன்று நகரங்களில் லக்னோவும் இடம்பெற வேண்டும். அதற்கான பாதையில்தான் அரசு பயணிக்கிறது.
நாம் இப்போது காணும் வளர்ச்சியில் மத்திய, மாநில தலைவர்களின் பங்களிப்பு உள்ளது. உட்கட்டமைப்பு வசதியின் வளர்ச்சி மூலமே பொருளாதார வளர்ச்சி மேம்படும். பிரதமர் மோடி தலைமையில் நாடு அதிசயத்தக்க வளர்ச்சியை கண்டுள்ளது. உலக அரங்கில் இந்தியாவின் கௌரவம் வெகுவாக உயர்ந்துள்ளது." என ராஜ்நாத்சிங் தெரிவித்தார்.
இதையும் படிங்க: NIPUN புதிய கல்வி திட்டத்தை தொடங்கி வைக்கும் அமைச்சர்