சண்டிகர்: பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் ஓர் குடையின்கீழ் மாற்றுத்திறனாளி நோயாளிகளுக்கு அனைத்துவிதமான ஒருங்கிணைப்புடன்கூடிய மருத்துவ சேவையைத் தொடங்கும்பொருட்டு ஆம்பியூட்டி கிளினிக் தொடங்கப்பட்டுள்ளது. இந்த கிளினிக் மாற்றுத்திறனாளி நோயாளிகளின் பராமரிப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் கிளினிக் ஆகும்.
இதனை முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் (பிஜிஐஎம்இஆர்) இயக்குநர் பேராசிரியர் ஜகத் ராம் நேற்று (பிப். 1) திறந்துவைத்தார். பின்னர் இது குறித்து பேசிய அவர், "இந்த முன்முயற்சியின் அடிப்படை நோக்கம் சமூகத்தில் நேர்மறையான எண்ணங்களுடன் மாற்றுத் திறனாளிகளை உணரவைக்கும் முயற்சியே.
இந்த முயற்சி, சமூகத்தில் மறுவாழ்வுக்கான பாதையில் வழிநடத்த பொருத்தமான அறிவுரைகளையும், நோயாளிகளுக்கு ஆலோசனை, அவர்களின் சிகிச்சை, மருத்துவ வசதிகளை எளிமையாக்கும் நோக்கத்திலுமே இந்த கிளினிக் தொடங்கப்பட்டுள்ளது " என்றார்.
இந்த முயற்சியை முன்னெடுத்த எலும்பியல் துறையின் தலைவர் பேராசிரியர் எம்.எஸ். தில்லான் கூறுகையில், "கடந்த சில ஆண்டுகளில், நோயாளிகள் தங்களுக்கான சிகிச்சைகளைப் பெறுவதில் எதிர்கொண்ட சிக்கல்களையும் பொருட்டு இந்த முயற்சி செய்யப்பட்டது.
பலதரப்பட்ட சிகிச்சைப் பராமரிப்புகளையும் பல்வேறு உயர்தர சிகிச்சை அம்சங்களுடனும், நோயாளிகளின் பராமரிப்பு மற்றும் மறுவாழ்வுக்கு ஒரே இடத்தில் அனைத்து முயற்சிகளும் இங்கு ஏற்படுத்த முனைந்துவருகிறோம் " என்றார்.