இந்தியாவின் நிலக்கரி இறக்குமதி குறித்த புள்ளிவிவரத்தை ’எம் ஜங்ஷன்’ என்ற ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த மே மாதத்தில் இந்தியாவின் நிலக்கரி இறக்குமதி 19.92 மில்லியன் டன்கள் (1.99 கோடி டன்) நடைபெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 20.4 விழுக்காடு அதிகம். மின் உற்பத்தி, போக்குவரத்து தேவைகள் உயர்வு காரணமாகவே இந்த இறக்குமதி அளவு அதிகரித்துள்ளதாக இந்த ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதேநேரம், அடுத்த சில மாதங்கள் இறக்குமதி அளவு குறைந்து காணப்படும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டுச் சந்தையில் நிலக்கரி இருப்பு அதிகரித்ததாலும், பருவமழை காரணமாக தேவை குறைவு ஏற்படும் என்பதாலும் இறக்குமதி அளவு குறையும் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: கந்தகார் தூதரகத்தை காலி செய்த இந்தியா