ETV Bharat / bharat

பிரதமர் நரேந்திர மோடி ஒரு கோழை- பிரியங்கா காந்தி

author img

By

Published : Jun 13, 2021, 5:11 AM IST

பிரதமர் நரேந்திர மோடி ஒரு கோழை. அவர் நாட்டை வீழ்த்திவிட்டார் என்று பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார்.

Priyanka Gandhi  Narendra Modi  Covid response  பிரியங்கா காந்தி  கோவிட்  காங்கிரஸ்  நரேந்திர மோடி

டெல்லி: காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், “நாடு நெருக்கடியில் உள்ளது. இந்நேரத்தில் நாட்டை மீட்பது குறித்து நரேந்திர மோடி அரசாங்கம் எதுவும் செய்யவில்லை.

நரேந்திர மோடி கோழை

உண்மையில் பிரதமர் நரேந்திர மோடி ஒரு கோழை. அவர் நாட்டை பலவீனப்படுத்திவிட்டார். அவருக்கு இந்தியர்கள் மீதான நினைப்பு முதலில் வருவதில்லை. அரசியல்தான் முதலில் வரும். உண்மை அவரை பொருட்படுத்தாது. அவர் எதிலும் அரசியல் செய்வார்.

ஒரு நாட்டில் நல்லாட்சி என்பது நெருக்கடி நிலையை எதிர்கொள்வது. பொறுப்பை உணர்ந்து நடவடிக்கை எடுப்பது. ஆனால் நரேந்திர மோடி அரசாங்கம் இதையெல்லாம் செய்யவில்லை. மாறாக, தொற்றுநோயின் தொடக்கத்திலிருந்து, உண்மையை மறைக்கவும் பொறுப்பைக் துறக்கவும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டது.

செயலற்ற நிலையில் அரசு

அதன் விளைவாக, இரண்டாவது அலை நம்மைத் தாக்கியபோது, ​​அரசாங்கம் செயலற்ற நிலைக்குத் தள்ளப்பட்டது. இந்தச் செயலற்ற தன்மை வைரஸை மிகப் பெரிய மூர்க்கத்தனத்துடன் பரப்பி, சொல்லமுடியாத துன்பத்தை ஏற்படுத்தியது.

இந்திய மற்றும் சர்வதேச வல்லுநர்களால் அளித்த எச்சரிக்கைகளை பின்பற்றி பிரதமர் நரேந்திர மோடி, முன்கூட்டியே செயல்பட்டிருந்தால் மருத்துவ படுக்கைகள், ஆக்ஸிஜன் மற்றும் மருந்துகளின் கடுமையான பற்றாக்குறையை நாம் சந்தித்திருக்க மாட்டோம்.

ஆக்ஸிஜனைக் கொண்டு செல்லத் தேவையான டேங்கர்களுக்கு அவர் உத்தரவிட்டிருப்பார். மேலும் அவர் முதன்முதலில் இந்திய உயிர்களை பற்றி எண்ணாமல் மில்லியன் கணக்கான உயிர் காக்கும் மருந்துகளை ஏற்றுமதி செய்தார். அவர் தனது தூக்கத்திலிருந்து எழுந்து தடுப்பூசிகளை பரவலாக்கியிருந்தால் எண்ணற்ற உயிர்களைக் காப்பாற்றியிருக்க முடியும். ஆனால் அவர் தனது சுய மதிப்பை உணர்த்துவதில் கவனமாக இருந்தார்.

குற்றச்சாட்டு

உண்மையில், பிரதமருக்கு ஒரு அரசியல்வாதியின் திறமை இருந்திருந்தால் அல்லது ஒரு உண்மையான தலைவரின் இரக்கமும், துணிச்சலும் இருந்திருந்தால், அவர் முன் வந்து தனது நாட்டு மக்களுக்கு மிகவும் உறுதியளிக்கும் போது அவர்களுக்கு உதவி மற்றும் ஆறுதல் அளித்திருப்பார்” எனக் கூறியுள்ளார்.

கோவிட் பரவலை கையாள்வதில் பாஜக அரசின் செயல்பாடுகள் குறித்து காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து விமர்சித்துவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'மக்கள் உயிரை எப்படி காக்கப்போகிறார் என பிரதமர் பதிலளிக்க வேண்டும்'- பிரியங்கா காந்தி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.