ETV Bharat / bharat

Wrestling: 2-வது நாளாக தொடர்ந்த போராட்டம்.. கம்யூ. எம்.பி.யை திருப்பி அனுப்பிய வீரர், வீராங்கனைகள்! - பயிற்சியாளர்கள் பாலியல் தொல்லை

இந்திய மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து 2-வது நாளாக போராட்டம் நடத்தி வரும் நிலையில், இந்த விவகாரம் குறித்து 72 மணி நேரத்தில் அறிக்கை அளிக்குமாறு இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

மல்யுத்த
மல்யுத்த
author img

By

Published : Jan 19, 2023, 10:16 PM IST

டெல்லி: இந்திய மல்யுத்த வீரர், வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தரில் 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ்பூஷன் சரண் சிங் மற்றும் சில பயிற்சியாளர்கள் பெண் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக கூறி மல்யுத்த வீரர், வீராங்கனைகளான வினேஷ் போகத், பஜ்ரங் பூனியா, சாக்‌ஷி மாலிக் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் மீது நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்தனர். வீரர், வீராங்கனைகளின் கூக்குரலுக்கு பிரதமர், உள்துறை அமைச்சர் செவி சாய்க்க வேண்டும் என்றும், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் உள்ளிட்டோர் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுத்து, மல்யுத்த கூட்டமைப்பின் நிர்வாகத்தை மாற்ற வேண்டும் என்றும் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், வீரங்கனைகளின் புகார் குறித்து 72 மணி நேரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என்று இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு மத்திய விளையாட்டு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து மல்யுத்த கூட்டமைப்பிற்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், "இந்த விவகாரம் விளையாட்டு வீரர்களின் நலன் சார்ந்தது என்பதால், அமைச்சகம் இதனை தீவிரமான ஒன்றாகப் பார்க்கிறது.

இந்த விவகாரம் தொடர்பாக 72 மணி நேரத்தில் பதில் அளிக்க வேண்டும். தவறினால், தேசிய விளையாட்டுத்துறை விதி 2011ன் படி இந்திய மல்யுத்த கூட்டமைப்பிற்கு எதிராக அமைச்சகம் நடவடிக்கை எடுக்கத் தொடங்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்திய மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. பிருந்தா காரத்தை தடுத்து நிறுத்திய வீரர், வீராங்கனைகள் போராட்டத்தை அரசியலாக்க வேண்டாம் என கைகூப்பி திருப்பி அனுப்பினர்.

இந்நிலையில், லக்னோவில் நேற்று(ஜன.18) தொடங்க இருந்த இந்திய விளையாட்டு ஆணையத்தின் தேசிய சிறப்பு பயிற்சி முகாம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதில் 41 மல்யுத்த வீரர்கள், 13 பயிற்சியாளர் மற்றும் துணை பயிற்சியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள இருந்தனர்.

மேலும் பயிற்சி முகாமில் கலந்து கொள்ள லக்னோ வந்த வீரர், வீராங்கனைகள் திரும்பிச் செல்ல தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு மத்திய விளையாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் தேசிய அளவிலான பயிற்சி முகாம் ரத்து செய்யப்பட்டது குறித்து வீரர், வீராங்கனைகளுக்கு தகவல் அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: Wrestling: இந்திய மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டம்.. அதிர்ச்சி அளிக்கும் காரணங்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.