சிங்கப்பூர் அரசின் முன்னாள் துணை பிரதமராக இருந்த தர்மன் சன்முகரத்தினம், தற்போது சிங்காப்பூர் அரசின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். அதிபர் தேர்தலில் அவருக்கு 70 புள்ளி 40 சதவீத ஆதரவு வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ் வம்சாவளியை சேர்ந்த தர்மன் சண்முகரத்தினம் (66) சீன ஜப்பானிய வம்சாவளியை சேர்ந்த சிங்கப்பூர் வழக்கறிஞரான ஜேன் யூமிகோ இட்டோகியை திருமணம் செய்து கொண்டார்.
அவரும் பல்வேறு சமுதயா இன்னல்களுக்காக குரல் கொடுத்து வருகிறார். இத்தம்பதியினருக்கு ஒரு மகள் மற்றும் மூன்று மகன்கள் உள்ளனர். சிங்கப்பூரில் 3வது இந்தியா வம்சாவளியை சேர்ந்த நபர் அடுத்த 6 ஆண்டுளுக்கு அதிபராக பதவிவகிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. சிறந்த பொருளாதார நிபுணராக அறியப்படும் தர்மன், தற்போது சிங்கப்பூரின் ஒன்பதாவது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.
ஏறத்தாழ 27 லட்சம் மக்கள் தொகை கொண்ட சிங்கப்பூர் வாக்காளர்களில் 9 சதவீத மக்கள் தர்மன் சண்முகரத்தினத்திற்கு ஆதரவாக வாக்களித்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. சிங்கப்பூரின் தற்போதைய அதிபர் ஹலிமா யாகூப்பின் 6 ஆண்டு பதவிகாலம் வரும் செப்டம்பர் மாதம் 13ஆம் தேதி நிறைவடையும் நிலையில், நேற்று ( செப் 1) தேர்தல் நடைபெற்றது.
இதையும் படிங்க: மணிப்பூர் மாநிலம் முழுவதும் உணவு, மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு!
சிங்கப்பூரில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை கொண்டுவந்து நாட்டின் முன்னேற்றத்திற்கு பெரும் பங்களித்த இவர் அடுத்த 6 ஆண்டுகளுக்கு தலைமை வகிக்க உள்ளார். முன்னதாக "கடந்த பல ஆண்டுகளில் நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் தேசிய கொள்கையை உருவாக்கி பல வழிகளில் உழைத்ததில் பெரும் மகிழ்ச்சியை தருகிறது" என தேர்தலுக்கு முன்பு அவர் கூறியிருந்தார்.
சிங்கப்பூர் அரசாங்க முதலீட்டு நிறுவனத்தில் (GIC) முன்னாள் தலைமை முதலீட்டு அதிகாரியான இங் கொக் சொங் (76) மற்றும் அரசுக்குச் சொந்தமான தொழிற்சங்க அடிப்படையிலான காப்பீட்டுக் குழுவான NTUCயின் முன்னாள் தலைவரான டான் கின் லியான் (70) ஆகியோரை தர்மன் தேர்தலில் வீழ்த்தினார்.
சிங்கப்பூரில் பிப்ரவரி 25 ஆம் தேதி, 1957 ஆம் ஆண்டு பிறந்த தர்மன் சண்முகரத்தினம், மூன்று உடன்பிறப்புகளை கொண்டவர். சிங்கப்பூர் புற்றுநோய் பதிவேட்டை நிறுவி, புற்றுநோய் ஆராய்ச்சி மற்றும் நோயியல் தொடர்பான பல சர்வதேச நிறுவனங்களுக்கு தலைமை தாங்கிய "சிங்கப்பூரில் நோயியலின் தந்தை" என்று அழைக்கப்படும் மருத்துவ விஞ்ஞானி பேராசிரியர் கே. சண்முகரத்தினத்தின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
உலக அளவில் பல்வேறு துறைகளில் தமிழர்கள் சாதித்து வருகின்றனர், இந்நிலையில் பல நாடுகளில் அரசியலிலும் ஆளுமை செலுத்தி வருகின்றனர். குறிப்பாக அமெரிக்க துணை அதிபராக தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், இங்கிலாந்தின் பிரதமராக ரிஷி சுனக் பதவி வகுத்து வருகிறார். இந்நிலையில் சிங்கப்பூரின் அதிபராக தமிழர் தர்மன் சண்முகரத்னம் தேர்வாகி இருப்பது உலக அரங்கில் இந்தியாவின் பெயர் மென்மேலும் உயர காரணமாய் உள்ளது.
இதையும் படிங்க: உத்தரகாண்டில் குதிரை நூலகம்.. மலைகளின் நடுவே சவால்களைக் கடந்து சவாரி!