ETV Bharat / bharat

இந்தியக் கடற்படையின் புதிய தலைமைத் தளபதியாக பொறுப்பேற்ற அட்மிரல் ஆர். ஹரி குமார் - கடற்படை தலைமைத் தளபதி

இந்தியக் கடற்படையில் 41 ஆண்டுகளுக்கும் மேலாக தலைமைத் தளபதியாகப் பணிபுரிந்த அட்மிரல் கரம்பீர் சிங் ஓய்வு பெற்றதையடுத்து, அட்மிரல் ஆர். ஹரி குமார் புதிய தலைமைத் தளபதியாக பொறுப்பேற்றார்.

அட்மிரல் ஆர். ஹரி குமார்
அட்மிரல் ஆர். ஹரி குமார்
author img

By

Published : Nov 30, 2021, 8:35 PM IST

ஹைதராபாத்: இந்தியக் கடற்படையின் முன்னாள் தலைமத் தளபதி அட்மிரல் கரம்பீர் சிங் ஓய்வு பெற்றதையடுத்து, அட்மிரல் ஆர். ஹரி குமார் இன்று (நவ.30) 25ஆவது தலைமைத் தளபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இவர், கடக்வாஸ்லாவில் (Khadakwasla) உள்ள புகழ்பெற்ற தேசிய பாதுகாப்பு அகாதெமியின் (National Defence Academy) முன்னாள் மாணவர் ஆவார்.

ஜனவரி 1ஆம் தேதி, 1983ஆம் ஆண்டு இந்தியக் கடற்படையில் பணியமர்த்தப்பட்ட இவர், 38 ஆண்டுகளுக்கும் மேலான கடலோர காவல்படை கப்பல் C-01, இந்தியக் கப்பல்கள் நிஷாங்க், கோரா, ரன்வீர், விமானம் தாங்கிக் கப்பலான ஐஎன்எஸ் விராட் ஆகியவற்றுக்கு தலைமை தாங்கியுள்ளார்.

அட்மிரல் ஆர். ஹரி குமார்
அட்மிரல் ஆர். ஹரி குமார்

மேலும் துப்பாக்கிச் சுடுதலில் வல்லுநரான இவர், கடற்படை செயல்பாட்டு அலுவலர், வெஸ்டர்ன் ஃப்ளீட்டின் ஃப்ளீட் கன்னெரி அலுவலர் (Fleet Gunnery Officer of Western Fleet), ஐஎன்எஸ் விபுலின் நிர்வாக அலுவலர், ஐஎன்எஸ் ரஞ்சித்தின் கன்னேரி அலுவலர், ஐஎன்எஸ் குத்தாரின் ஜிஓவை இயக்குதல், ஐஎன்எஸ் ரன்வீரின் கமிஷன் குழுவினர் உள்பட பல முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார்.

இதையும் படிங்க: ஐந்தாண்டுகளில் குடியுரிமையை துறந்த ஆறு லட்சம் இந்தியர்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.