இதுகுறித்து பாதுகாப்பு வட்டாரங்கள் கூறுகையில், “சீன ஆராய்ச்சிக் கப்பல் நடமாட்டம் இந்திய பெருங்கடல் பகுதியில் அதிகரித்துள்ளது. வான்வழியாகவும், செயற்கைக்கோள் மூலமும் சீன ஆராய்ச்சிக் கப்பல் இந்தியாவை நோட்டமிடுகிறதா என்பதை இந்தியக் கடற்படை தீவிரமாகக் கண்காணித்து வருகிறது.
இந்தியாவின் எல்லைப்புற கடல்பகுதியிலிருந்து தொலைவில் இருக்கும் சீன ஆராய்ச்சிக் கப்பல் அமைதியாக இருப்பதால், நோட்டமிடவில்லை என்று கூறவிட முடியாது. சீனாவின் நோக்கத்தையும் சாதாரணமாக எடுக்க முடியாது” எனத் தெரிவித்தனர்.
இந்தியப் பெருங்கடல் பகுதிக்குள் சமீபகாலமாக சீனாவின் ஆராய்ச்சிக் கப்பல் ரோந்து அதிகரித்துள்ளது மூலம், இந்தியாவில் சில பகுதியை தங்களின் கட்டுப்பாட்டில் வைக்க திட்டமிட்டுள்ளது போல் தெரிகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: ‘தன்னை கொலை செய்ய முயன்றவர்கள் யார் என தெரியும்’ - இம்ரான் கான்