டெல்லி : ஆழ்கடலில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட டார்பிடோ வகை வெடிகுண்டை இந்திய கடற்படை வெற்றிகரமாக சோதித்து பார்த்தது.
ஆத்மநிர்பார் திட்டத்தின் கீழ் முற்றிலும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டிஆர்டிஓ மற்றும் இந்திய கடற்படை இணைந்து அதிக எடை கொண்ட டார்பிடோ ஆயுதத்தை உருவாக்கி உள்ளது. நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவக் கூடிய வகையில் இந்த ஆயுதம் உருவாக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஆழ்கடலில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கக் கூடிய வகையில் உயர் தொழில்நுட்பத்தில் இந்த ஆயுதத்தை உருவாக்கப்பட்டு உள்ளதாக கூறப்பட்டு உள்ளது. டார்பிடோ ஆயுதம் இலக்கை துல்லியமாக தாக்கி அழித்த வீடியோவை இந்திய கட்ற்படை தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ளது.
-
Successful engagement of an Underwater Target by an indigenously developed Heavy Weight Torpedo is a significant milestone in #IndianNavy's & @DRDO_India's quest for accurate delivery of ordnance on target in the underwater domain. #AatmaNirbharBharat@DefenceMinIndia pic.twitter.com/ZMSvtFSobE
— SpokespersonNavy (@indiannavy) June 6, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Successful engagement of an Underwater Target by an indigenously developed Heavy Weight Torpedo is a significant milestone in #IndianNavy's & @DRDO_India's quest for accurate delivery of ordnance on target in the underwater domain. #AatmaNirbharBharat@DefenceMinIndia pic.twitter.com/ZMSvtFSobE
— SpokespersonNavy (@indiannavy) June 6, 2023Successful engagement of an Underwater Target by an indigenously developed Heavy Weight Torpedo is a significant milestone in #IndianNavy's & @DRDO_India's quest for accurate delivery of ordnance on target in the underwater domain. #AatmaNirbharBharat@DefenceMinIndia pic.twitter.com/ZMSvtFSobE
— SpokespersonNavy (@indiannavy) June 6, 2023
இது குறித்து இந்திய கடற்படையின் செய்தி தொடர்பாளர் தன் ட்விட்டர் பக்கத்தில், "உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட அதிக எடை கொண்ட டார்பிடோ ஆயுதம் மூலம் நீருக்கடியில் இலக்கு மீது வெற்றிகரமாக தாக்குதல் நடத்த முடியும். நீருக்கு அடியில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கக் கூடிய ஆயுதத்தை உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கி இந்திய கடற்படை மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டிஆர்டிஒ புது மைல்கல்லை அடைந்து உள்ளதாக கூறியுள்ளார்.
ஆத்மநிர்பார் பாரதம் திட்டத்தின் மூலம் எதிர்கால போர் தயார் நிலைக்கான எதிர்கொள்ளும் உறுதிப்பாட்டை காட்டுவதாக அவர் தெரிவித்து உள்ளார். மேலும் டிஆர்டிஓவின் கடற்படை மற்றும் கடற்படை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வகம் (NSTL) மேம்படுத்த ஹெவி வெயிட் நீர்மூழ்கி எதிர்ப்பு ஆயுதமான வருணாஸ்த்திராவை உருவாக்கியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
முன்னதாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஐ.என்.எஸ் விக்ராந்த் போர்க் கப்பலில், எம்.எச். 60 வகை ரோமியோ ஹெலிகாப்டரை தரையிறக்கி இந்திய கடற்படை மற்றொரு மைல்கல்லை எட்டியது. ஐ.என்.எஸ் போர்க் கப்பலில், எம்.எச். 60 வகை ஹெலிகாப்டர் வெற்றிகரமாக தரையிறங்கிய வீடியோவை இந்திய கடற்படை வெளியிட்டு உள்ளது.
கடந்த மே மாதம் இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ். மர்முகோவா போர்க் கப்பலில், பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணையை இந்திய கடற்படை வெற்றிகரமாக சோதித்து பார்த்தது. இந்தியா - ரஷ்யா கூட்டாக இணைந்து பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் என்ற நிறுவனத்தின் சார்பில் இந்த ஏவுகணை தயாரித்தது.
இந்திய கடற்படைக்கு சொந்தமான, ஐ.என்.எஸ். மர்முகோவா போர்க் கப்பலில் இருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணை, ஒலியை விட மூன்று மடங்கு வேகத்தில் செல்லக் கூடியது என தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க : 1981 Bihar Train Derailment : நாட்டை உலுக்கிய மற்றொரு ரயில் விபத்து!