ETV Bharat / bharat

இந்திய கடற்படை 2047ஆம் ஆண்டுக்குள் தற்சார்பாக மாறும் - கடற்படைத் தளபதி ஹரி குமார் - Indian Navy become Atmanirbhar

இந்திய கடற்படை 2047ஆம் ஆண்டுக்குள் தற்சார்பாக (ஆத்ம நிர்பார்) மாறிவிடும் என்று கடற்படைத் தளபதி ஹரி குமார் உறுதி அளித்துள்ளார்.

கடற்படைத் தளபதி ஹரிகுமார்
கடற்படைத் தளபதி ஹரிகுமார்
author img

By

Published : Dec 3, 2022, 3:46 PM IST

டெல்லி: இந்திய கடற்படை 2047ஆம் ஆண்டுக்குள் முழுவதும் தற்சார்பாக (ஆத்ம நிர்பார்) மாறிவிடும் என்று மத்திய அரசுக்கு உத்தவாதம் அளித்துள்ளதாக கடற்படைத் தளபதி ஹரி குமார் தெரிவித்தார். இந்திய கடற்படை தினத்தை முன்னிட்டு கடற்படைத் தளபதி ஹரி குமார் இன்று (டிசம்பர் 3) டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஹரி குமார் கூறுகையில், இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீன ராணுவத்தின் ஆராய்ச்சிக் கப்பல்களின் நடமாட்டம் உள்ளது. இந்த கப்பல்களை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். இந்திய கடற்படை மிகவும் முன்னேற்றம் கண்டுள்ளது.

இந்தியா பொருளாதாரம், பாதுகாப்பு போன்றவற்றில் முன்னேறும் வேளையில் கடல்சார் பாதுகாப்பு அதிக முக்கியத்துவம் பெறுகிறது. பாதுகாப்புத் துறையில் தற்சார்பு இந்தியாவை அடைவதற்கு மத்திய அரசால் மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டங்களின் தெளிவான வழிகாட்டுதல்கள் கடற்படைக்கும் வழங்கப்பட்டுள்ளது. 2047ஆம் ஆண்டுக்குள் இந்திய கடற்படை முழுவதும் தற்சார்பாக (ஆத்ம நிர்பார்) மாறிவிடும் என்று மத்தி அரசுக்கு உத்தரவாதம் அளித்துள்ளோம். அதற்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட விமானம் தாங்கிப் போர்க்கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த் நாட்டுக்காக அர்ப்பணிக்கப்பட்டது குறிப்பிடத்தக்க மாற்றமாகும். பாதுகாப்பு தளவாடங்களில் மேட்-இன்-இந்திய பயன்பாடு முக்கிய நோக்கமாக உள்ளது. அண்மையில் 3,000 அக்னிவீரர்கள் கடற்படைக்கு வந்துள்ளனர். அவர்களில் 341 பேர் பெண்கள். முதன்முறையாக பெண் மாலுமிகளை உருவாக்க உள்ளோம் என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: இவிஎம் மீது குற்றம் சாட்டும் காங்கிரஸ் தோல்வியை ஏற்றுக்கொண்டுவிட்டது - பிரதமர் மோடி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.