உக்ரைன் மீதான போரை வெளிப்படையாக அறிவிக்கும் விதமாக அந்நாட்டின் மீது ராணுவ நடவடிக்கை எடுக்க ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் உத்தரவிட்டுள்ளார். உக்ரைன் நாட்டின் அச்சுறுத்தலுக்கு பதில் அளிக்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அதிபர் புதின் தனது உரையில் தெரிவித்துள்ளார்.ரஷ்யாவின் நடவடிக்கைக்கு எதிராக குறுக்கே நிற்க யாரேனும் முற்பட்டால் அவர் இதுவரை காணாத விளைவுகளை சந்திக்க நேரிடும் என புதின் எச்சரித்துள்ளார்.
மாணவர்கள் நாடு திரும்ப உத்தரவு
இந்நிலையில்,உக்ரைன் நாட்டில் நடைபெற்று வரும் போரினால் அங்கு படித்து வரும் இந்தியாவைச் சேர்ந்த மாணவர்கள் அனைவரும் தாயகம் திரும்ப வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும் உக்ரைனில் படிக்கும் மாணவர்களுக்கு ஆகஸ்ட் வரை ஆன்லைன் வகுப்புகள் நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.மேலும்,உக்ரைனில் கல்வி பயிலும் மாணவர்கள், பணியாற்றும் தமிழர்கள் நாடு திரும்ப உதவி தேவைப்பட்டால் அணுகலாம் என அயலக தமிழர் நலன் & மறுவாழ்வுத்துறை ஆணையரகம் அறிவித்துள்ளது. மேலும் அவசர உதவிக்கு தொலைபேசி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.
044-28515288 /
96000 23645 /
99402 56444
www.nrtamils.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாகவும் உதவிகள் கோரலாம்.
இதையும் படிங்க:உக்ரைனில் ராணுவ நடவடிக்கை - புதின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு