ஐந்தாவது ஆயுர்வேத தினத்தை முன்னிட்டு தெற்காசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள இந்திய தூதரகம் சார்பில் நேற்று (நவ.13) நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதுகுறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், "பொதுமக்கள் நலன் மற்றும் பாரம்பரியமே நம்மை ஒருங்கிணைக்கிறது. இதன் காரணமாகவே ஆயுர்வேதத்தில் நாம் வைத்துள்ள ஆர்வம் வெளிப்படுகிறது. தெற்காசிய நாடுகளில் உள்ள நமது தூதரகம் ஆயுர்வேத தினத்தை முன்னிட்டு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது.
நவீன உலகில் ஆயுர்வேதத்தின் முக்கியத்துவம் குறித்து இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஒரு நிகழ்ச்சியை நடத்தியுள்ளது. கரோனா காலத்தில் ஆயுர்வேதம் என்ற தலைப்பில் நேபாளில் உள்ள இந்திய தூதரகம் ஒரு நிகழ்ச்சியை நடத்தியது" என பதிவிட்டுள்ளார்.
2016 ஆம் ஆண்டு முதல் ஆயுஷ் அமைச்சகம் ஆயுர்வேதம் தினத்தைக் கொண்டாடி வருகிறது.