ETV Bharat / bharat

அச்சச்சோ!... கேப்டனுக்கு கரோனாவா... - இங்கிலாந்து டெஸ்ட் போட்டி

இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மாவிற்கு நேற்று (ஜூன் 25) கரோனா தொற்று உறுதி செய்யபட்டது. எனவே, இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கு ரிஷப் பந்த் கேப்டனாக செயல்பட வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.

அச்சச்சோ!  கேப்டனிற்கு கரோனா தொற்று உறுதி...

author img

By

Published : Jun 26, 2022, 7:23 AM IST

Updated : Jun 26, 2022, 7:29 AM IST

லண்டன்: கடந்தாண்டு ஆகஸ்ட் - செப்டம்பர் மாதங்களில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாட இந்திய அணி இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. நான்கு போட்டிகள் நடைபெற்ற நிலையில், ஐந்தாவது போட்டியின்போது இந்திய அணி வீரர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டதால் அந்த ஆட்டம் ரத்துசெய்யப்பட்டது.

தொடரில் இந்திய அணி 2 -1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. மேலும், தொடரின் வெற்றியை தீர்மானிக்க கடைசி போட்டிக்கு பதிலாக மற்றொரு போட்டி நடத்தப்படும் என இருநாட்டு கிரிக்கெட் வாரியங்களும் அறிவித்திருந்தன. இதைத்தொடர்ந்து, இந்திய அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

ரேபிட் டெஸ்டில் உறுதி: விடுபட்ட அந்த ஒரு டெஸ்ட் போட்டி மட்டுமல்லாமல் டி20, ஒருநாள் தொடர்களையும் இங்கிலாந்து அணியுடன் இந்தியா விளையாட உள்ளது. இந்நிலையில், இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. அவரிடம் நேற்று (ஜூன் 25) மேற்கொள்பட்ட ரேபிட் பரிசோதனையில் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

  • UPDATE - #TeamIndia Captain Mr Rohit Sharma has tested positive for COVID-19 following a Rapid Antigen Test (RAT) conducted on Saturday. He is currently in isolation at the team hotel and is under the care of the BCCI Medical Team.

    — BCCI (@BCCI) June 25, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதைத்தொடர்ந்து, அவர் அணி வீரர்கள் தங்கியிருக்கும் நட்சத்திர ஹோட்டலில் தனிமையில் இருப்பதாகவும், அவர் பிசிசிஐ மருத்துக்குழுவின் கண்காணிப்பில் இருப்பதாகவும் பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

டி20யில் ரோஹித்: இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி, பர்மிங்ஹாம் நகரில் உள்ள எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட் மைதானத்தில் வரும் ஜூலை 1ஆம் தேதி தொடங்குகிறது. இன்னும் குறைவான நாள்களே இருப்பதால் டெஸ்ட் போட்டியில் ரோஹித் விளையாடுவது சந்தேகமே. எனவே, ரோஹித் சர்மாவிற்கு பதிலாக கேப்டன் பொறுப்பை ரிஷப் பந்த் கவனித்துக்கொள்வார் என கூறப்படுகிறது. டி20 தொடர் ஜூலை 7ஆம் தேதி தொடங்கும் நிலையில், அதற்குள் கேப்டன் ரோஹித் அணியுடன் இணைந்துவிடுவார் என்று தெரிகிறது.

அஸ்வினும் அவுட்?: முன்னதாக, இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வினும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இந்தியாவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவரும் இங்கிலாந்து உடனான போட்டியில் விளையாடுவதற்கு வாய்ப்பு குறைவு என்றே தெரிகிறது.

அயலார்ந்தில் இளம் அணி: மேலும், தற்போது இளம் வீரர்கள் அடங்கிய இந்திய அணி, அயர்லாந்து அணியுடன் இரண்டு டி20 போட்டிகளை விளையாட அயர்லாந்து சென்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டி மலாஹிட் நகரில் இந்திய நேரப்படி இன்று இரவு 9.30 மணிக்கு தொடங்குகிறது.

இதையும் படிங்க: அயர்லாந்துக்கு எதிரான டி-20 தொடர்! பிளேயிங் 11ல் யார் யாருக்கு வாய்ப்பு?

Last Updated : Jun 26, 2022, 7:29 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.