ETV Bharat / bharat

காம்பியாவில் 66 குழந்தைகள் உயிரிழப்பிற்குக்காரணம் இந்திய நிறுவனமா?; விசாரணையைத் தொடங்கிய மத்திய அரசு

ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள காம்பியாவைச் சேர்ந்த 66 குழந்தைகள் உயிரிழந்ததற்கு இந்திய மருந்து தயாரிக்கும் நிறுவனம் காரணம் என உலக சுகாதார மையத்தின் அறிவிப்பு வெளியானதையடுத்து, மத்திய அரசு அந்நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறது.

காம்பியாவில் 66 குழந்தைகள் உயிரிழப்பிற்கு காரணம் இந்திய நிறுவனம்; விசாரணையை தொடங்கிய மத்திய அரசு

author img

By

Published : Oct 6, 2022, 10:12 PM IST

சோனிபட்(ஹரியானா): ஆப்பிரிக்கா காம்பியாவைச்சேர்ந்த 66 குழந்தைகள் கடுமையான சிறுநீரகப் பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். இதற்கு ஹரியானாவைச் சேர்ந்த 'மெய்டன் பார்மாசூட்டிகல்ஸ் லிமிடெட்' என்ற மருந்து தயாரிப்பு நிறுவனம் தயாரித்த மருந்தை குடித்தது காரணமாக இருக்கலாம் என உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார மையத்தின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறியதாவது, “இந்தியாவில் மைடன் பார்மாசூட்டிகல்ஸ் லிமிடெட் தயாரித்த ப்ரோமெதாசின் வாய்வழி கரைசல், கோஃபெக்ஸ்மாலின் பேபி காஃப் சிரப், மகோஃப் பேபி காஃப் சிரப் மற்றும் மேக்ரிப் என் கோல்ட் சிரப் ஆகிய நான்கு மருந்துகள் இருமல் மற்றும் சளி சிரப் ஆகும்.

ஹரியானா மாநிலத்தில் உள்ள மெய்டன் பார்மாசூட்டிகல்ஸ் லிமிடெட் நிறுவனத்தின், தயாரிப்புகளின் பாதுகாப்பு மற்றும் தரம் குறித்து உலக சுகாதார மையம் உத்தரவாதம் அளிக்கவில்லை. இந்த அசுத்தமான தயாரிப்புகள் இதுவரை காம்பியாவில் மட்டுமே கண்டறியப்பட்டாலும், அவை மற்ற நாடுகளுக்கு விநியோகிக்கப்படலாம். இதனால் ஆபத்தை மேலும் அதிகரிக்கலாம்.

உலக சுகாதார மையத்திற்கு கிடைத்த தற்காலிக முடிவுகளின்படி, பரிசோதிக்கப்பட்ட 23 மாதிரிகளில், நான்கு மாதிரிகளில் மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் டைத்திலீன் கிளைகோல் / எத்திலீன் கிளைகோல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

நோயாளிகளுக்கு மேலும் தீங்கு விளைவிப்பதைத் தடுக்க அனைத்து நாடுகளும் இந்த தயாரிப்புகளைக் கண்டறிந்து அவற்றை புழக்கத்தில் இருந்து அகற்றுமாறு உலக சுகாதார மையம் பரிந்துரைக்கிறது’ என்றார்.

உலக சுகாதார மையத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, மத்திய மருந்துகள் நிலையான கட்டுப்பாட்டு அமைப்பு(CDSCO) விசாரணையை முடுக்கி விட்டுள்ளது. டெல்லி மற்றும் சோனிபட் சுகாதாரத் துறையைச்சேர்ந்த குழு மருந்துகளை சரிபார்க்க அந்த நிறுவனத்தில் சோதனை நடத்தி விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இதையும் படிங்க: துர்கா சிலை கரைப்பு...ஆற்றில் திடீர் வெள்ளம் - நீரில் மூழ்கி 7 பேர் உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.