புதுடெல்லி: கடந்த (மே.8) தேதி ஹட்பே ஆர்பர் அருகே உள்ள கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் கடல் சீற்றம் காரணமாக கடலில் சிக்கியுள்ளனர்.
இதனையறிந்த இந்திய கடலோர காவல் படையினர் நேற்று (மே 9) 'எஃப்.பி. கலாம்மா' என்ற மீன்பிடி படகில் கடலுக்கு சென்றுள்ளனர். அங்கு படகு கவிழ்ந்து மோசமான நிலையில் காணப்பட்டது.
காவல் படையினர் படகில் இருந்த ஐந்து மீனவர்களை மீட்டு மீனவ அலுவலர்களிடம் ஒப்படைத்தனர். மீட்கபட்ட மீனவர்கள் ஆரோக்கியமாக இருப்பதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: சுற்றுலாத் துறை அமைச்சருக்கு கரோனா தொற்று!