ETV Bharat / bharat

வங்கதேச ராணுவ பயிற்சியில் இந்திய ராணுவம் - வங்கதேசத்தின் பிதமாகனான ஷேக் முஜ்பூர் ரஹ்மான்

டெல்லி: வங்கதேசத்தின் 50ஆவது சுதந்திர தினத்தையொட்டி நடத்தப்படும் ராணுவ பயிற்சி முகாமில் இந்திய ராணுவம் பங்கேற்றுள்ளது.

வங்கதேச ராணுவ பயிற்சியில் இந்திய ராணுவம்

author img

By

Published : Apr 5, 2021, 5:59 AM IST

வங்கதேச முன்னாள் குடியரசு தலைவர் ஷேக் முஜிபூர் ரஹ்மானின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டும், வங்கதேசத்தின் 50ஆவது சுதந்திர தினத்தையொட்டியும் பன்னாட்டு ராணுவப் பயிற்சி இன்று தொடங்கியது. சாந்திர் ஓக்ரோஷேனா என பெயரிடப்பட்டுள்ள இந்த பயிற்சி முகாம் வரும் ஏப்ரல் 12ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த முகாமில் இந்திய ராணுவ படையைச் சேர்ந்த வீரர்கள், ஜூனியர் கமிஷனட் அலுவலர்கள் (ஜே.சி.ஓ) மற்றும் டோக்ரா படைப்பிரிவின் வீரர்கள் அடங்கிய 30 பேர் கொண்ட குழு பங்கேற்றுள்ளனர். முகாமில் பங்கேற்பவர்களுக்கு கோவிட்-19 ஆர்.டி.பி.ஆர் சோதனை செய்யப்பட்டது.

Indian Army delegation in Bangladesh to participate in multinational military exercise
வங்கதேச ராணுவ பயிற்சியில் இந்திய ராணுவம்

இந்த முகாமில், இந்திய ராணுவம் மட்டுமில்லாது ராயல் பூடான் ராணுவம், இலங்கை ராணுவம், பங்களாதேஷ் ராணுவம் போன்றவையும் பங்கேற்றுள்ளன.

யார் இந்த ஷேக் முஜிபூர் ரஹ்மான்?

ஷேக் முஜிபுர் ரஹ்மான், வங்கதேசம் தனி நாடாக உருவாகக் காரணமாக இருந்தவர். இந்த நாட்டின் முதல் அதிபரான இவர், தற்போது வங்கதேசத்தின் பிரதமராக உள்ள ஷேக் ஹசினாவின் தந்தை. முஜிபுர் ரஹ்மான் 1975ஆம் ஆண்டு ராணுவ சதியால் கொல்லப்பட்டார். அவரது குடும்ப உறுப்பினர்களும் அப்போது கொலை செய்யப்பட்டனர். வங்கதேசம், பாகிஸ்தானிடமிருந்து விடுதலை பெற்ற நான்கு ஆண்டுகளில் இந்த சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:தூக்கி வீசப்பட்ட தூரிகைகள்: பேனர் கலாசாரம்தான் காரணமா?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.