ETV Bharat / bharat

குரான் எரிப்பு சம்பவம்... ஐநா மனித உரிமை சபையில் பாகிஸ்தானுக்கு இந்தியா ஆதரவு!

இஸ்லாமியர்களின் புனித நூலான குரான் தீயிட்டு எரிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் பாகிஸ்தான் கொண்டு வந்த வரைவு தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு அளித்து உள்ளது. ஏறத்தாழ 28 நாடுகள் ஆதரவு தெரிவித்த நிலையில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

Quran
Quran
author img

By

Published : Jul 12, 2023, 10:47 PM IST

ஜெனீவா : இஸ்லாமியர்களின் புனித நூலான குரான் தீயிட்டு எரிக்கப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐநாவில் பாகிஸ்தான் கொண்டு வந்த வரைவு தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு தெரிவித்தது. இஸ்லாமியர்களின் புனித நூலான குரானை இழிவுபடுத்தும் சமீபத்திய பொது மற்றும் திட்டமிடப்பட்ட செயல்களை கண்டிப்பதாகவும் கடுமையாக நிராகரிப்பதாகவும் இந்தியா தெரிவித்து உள்ளது.

இஸ்லாமியர்களின் புனித நூலான குரானை தீயிட்டு எரித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐநாவின் மனி உரிமைகள் ஆணையத்தில் பாகிஸ்தான் வரைவு தீர்மானம் ஒன்றை தாக்கல் செய்தது. இந்நிலையில் 28 உறுப்பு நாடுகளின் ஆதரவுடன் அந்த தீர்பானம் ஐநா மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ராஸ்மஸ் பலுடன் என்பவர் துருக்கி தூதரகத்தில் இஸ்லாமியர்களின் புனித நூலான குரானை தீயிட்டு எரித்து போராட்டம் நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பல்வேறு இஸ்லாமிய நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்தன.

இந்நிலையில் குரான் எரிப்பு போராட்டத்துக்கு எதிராக ஐநாவில் உள்ள மனித உரிமைகள் ஆணையத்தில் பாகிஸ்தான் மற்றும் பாலஸ்தீன நாடுகள் சார்பில் வரைவு தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. மதவெறுப்புக்கு எதிரான இத்தகைய செயல்பாடுகளை ஒவ்வொரு நாட்டு அரசும் தடுக்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் மத சுதந்திரம், கருத்து சுதந்திரம் நசுக்கப்படும் என்றும் குரான் எரிப்பில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த தீர்மானத்தில் கூறப்பட்டது.

மேற்கு நாடுகள் மத சுதந்திரத்தை பாதுகாக்க கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றும் இதுபோன்ற செயல்கள் வருங்காலத்தில் நிகழாமல் இருக்க போதிய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று அந்த தீர்மானத்தில் கூறப்பட்டு இருந்தது. இந்த தீர்மானத்துக்கு இந்தியா, சீனா வங்காளதேசம், கியூபா, மலேசியா, மாலத்தீவுகள், பாகிஸ்தான், கத்தார், உக்ரைன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உள்பட 28 நாடுகள் இந்த வரைவு தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்தன.

பெல்ஜியம், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட 12 நாடுகள் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் 7 நாடுகளின் பிரதிநிதிகள் நடுநிலை வகிப்பதாக அறிவித்தனர். ஐநா மனித உரிமைகள் பாதுகாப்பு சபையில் 28 உறுப்பு நாடுகள் வரைவு தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்ததால் தீர்மானம் நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது.

இதன் வெளிப்பாடாக தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்த நாடுகளின் பிரதிநிதிகள் கைகளை தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இது குறித்து பேசிய பாகிஸ்தான் தூதர் கலீல் ஹஷ்மி, இந்த தீர்மானம் என்பது சுதந்திரத்தை வலியுறுத்துவதாகும். மாறாக பேச்சுரிமையை கட்டுப்படுத்துவது என்பதை நோக்கமாக கொண்டது அல்ல. மேலும் அனைவருக்கும் சமநிலையை ஏற்படுத்தும் நோக்கத்தை இந்த தீர்மானம் கொண்டுள்ளது.

இந்த தீர்மானம் தற்போது நிறைவேறியது மூலம் குரான் உள்பட அனைத்து மதம் சார்ந்த நூல்களை யாரும் இழிவுப்படுத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.

இதையும் படிங்க : Ghost Train : அதிபர் புதினின் "பேய் ரயில்"... என்னதான் இருக்கு அப்படி?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.