அல்மோரா (உத்தரகண்ட்): இந்திய- உஸ்பெகிஸ்தான் இராணுவப் படைகள் உத்தரகண்ட் அல்மோராவில் 10 நாள்கள் கூட்டுப் பயிற்சியை புதன்கிழமை (மார்ச்10) தொடங்கின.
இந்தியா- உஸ்பெகிஸ்தான் இருதரப்பு பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக உஸ்பெகிஸ்தான் இராணுவப் படைகள் புதன்கிழமை உத்தரகண்டின் அல்மோராவில் 10 நாள் இராணுவப் பயிற்சியைத் தொடங்கின.
இந்தத் தகவலை இராணுவ அலுவலர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். இதில், இந்தியா- உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த தலா 45 வீரர்கள் "டஸ்ட்லிக் II" பயிற்சியில் பங்கேற்கின்றனர்.
இது குறித்து பாதுகாப்பு அமைச்சக அறிக்கையில், “இந்தக் கூட்டுப் பயிற்சி இரு நாடுகளுக்கிடையில் எப்போதும் வளர்ந்து வரும் இராணுவ மற்றும் இராஜதந்திர உறவுகளுக்கு நிச்சயமாக உத்வேகம் அளிக்கும். மேலும் பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்கான இரு நாடுகளின் வலுவான தீர்மானத்தையும் இது பிரதிபலிக்கும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக 2019ஆம் ஆண்டு நவம்பரில் இந்தியப் படைகள் உஸ்பெகிஸ்தான் நாட்டுக்கு சென்று பயிற்சிகள் மேற்கொண்டன. இந்நிலையில் தற்போது உஸ்பெகிஸ்தான் வீரர்கள் இந்தியா வந்துள்ளனர்.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஆணைப்படி மலை, கிராமப்புற மற்றும் நகர்ப்புற சூழ்நிலைகளில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் இரு குழுக்கள் தங்கள் நிபுணத்துவத்தையும் திறன்களையும் பகிர்ந்து கொள்வார்கள்” என்பது நினைவுகூரத்தக்கது.
இதையும் படிங்க: ராஜஸ்தானில் இந்திய - அமெரிக்க கூட்டு ராணுவப் பயிற்சி