ETV Bharat / bharat

இந்தியாவில் ஒரே நாளில் 9.29 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை! - கரோனா பரிசோதனை எண்ணிக்கை

டெல்லி : இந்தியாவில் இதுவரை 87 லட்சத்து 73 ஆயிரத்து 479 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், நேற்று ஒரே நாளில் 9.29 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் தெரிவித்துள்ளது.

India tracker: State-wise report
India tracker: State-wise report
author img

By

Published : Nov 14, 2020, 2:07 PM IST

இந்தியாவில் கரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தினந்தோறும் 40 ஆயிரத்தைத் தாண்டுகிறது. கரோனாவைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் தீவிராகக் களமிறங்கியுள்ளன.

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 44 ஆயிரத்து 684 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 87 லட்சத்து 73 ஆயிரத்து 479ஆக உள்ளது. கரோனா பாதிப்பால் நேற்று (நவ.13) ஒரே நாளில் 520 பேர் உயிரிழந்ததால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையானது ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 188ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சைப் பெற்று வருவோரின் எண்ணிக்கை நான்கு லட்சத்து 80 ஆயிரத்து 714ஆகக் குறைந்துள்ளது. கரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்புவோரின் எண்ணிக்கை 81 லட்சத்து 63 ஆயிரத்து 572ஆக உயர்ந்துள்ளது.

India tracker: State-wise report
மாநில வாரியாக கரோனா பாதிப்பு

அதிகபட்சமாக, மகாராஷ்டிரா மாநிலத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 17 லட்சத்து 40 ஆயிரத்து 461ஆக கடந்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக கர்நாடக மாநிலத்தில் கரோனா பாதிப்பு எட்டு லட்சத்து 57 ஆயிரத்து 928ஆக உள்ளது. தமிழ்நாட்டில் ஏழு லட்சத்து 54 ஆயிரத்து 460ஆக உள்ளது.

இதுவரை நாட்டில் 12 கோடியே 40 லட்சத்து 31 ஆயிரத்து 230 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதில் நேற்று (நவ.13) மட்டும் ஒன்பது லட்சத்து 29 ஆயிரத்து 491 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐஎம்சிஆர்) தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:இந்தியாவில் 24 மணி நேரத்தில் 44, 684 பேருக்கு கரோனா பாதிப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.