உலகளவில் கரோனா பாதிப்பில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இச்சூழலில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, குணமடைந்தோரின் எண்ணிக்கை ஆகியவற்றை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அதுகுறித்த தகவல் பின்வருமாறு:'கரோனா வைரஸால் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 38 ஆயிரத்து 310 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 82 லட்சத்து 67 ஆயிரத்து 623ஆக இருக்கிறது. கரோனா பாதிப்பால் நேற்று(நவ.02) ஒரே நாளில் 490 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையானது 1 லட்சத்து 23 ஆயிரத்து 97ஆக அதிகரித்துள்ளது.
கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 76 லட்சத்து 3 ஆயிரத்து 121ஆக அதிகரித்துள்ளது. கரோனா பாதித்த 5 லட்சத்து 41 ஆயிரத்து 405 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் குணமடைந்தோர் விகிதம் 91.96 விழுக்காடாக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் இறப்பு விகிதம் 1.49 விழுக்காடு உள்ளது.
இதுவரை மொத்தம் 11 கோடியே 17 லட்சத்து 89 ஆயிரத்து 350 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. நேற்று (நவ-2) ஒரே நாளில் 10 லட்சத்து 46 ஆயிரத்து 247 மாதிரிகள் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த சில நாட்களாக, கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அதேபோல், கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.