ETV Bharat / bharat

நாட்டில் 21% கார்பன் வெளியேற்றம் குறைவு - காலநிலை உச்சி மாநாட்டில் பிரதமர் பேச்சு - பாரீஸ் ஒப்பந்தம்

காலநிலை மாற்றம் தொடர்பான உச்சி மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, 2005ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் 21 விழுக்காடு கார்பன் வெளியேற்றம் குறைந்துள்ளது எனத் தெரிவித்தார்.

PM Modi
PM Modi
author img

By

Published : Dec 13, 2020, 10:37 AM IST

Updated : Dec 13, 2020, 11:29 AM IST

டெல்லி: இந்தியா தனது பாரிஸ் ஒப்பந்த இலக்குகளை அடைவதற்கான பாதையில் மட்டுமல்ல, எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்டு செயல்பட்டுவருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி நேற்று (டிச. 12) நடைபெற்ற காலநிலை உச்சி மாநாட்டில் காணொலி மூலமாகத் தெரிவித்தார்.

இது குறித்து மோடி பேசுகையில், “நாங்கள் இன்று எங்கள் லட்சியங்களை உயர்த்துவதற்கு முயற்சித்துவருகிறோம். இருப்பினும் கடந்த கால நிலைமைகளையும் மறக்கக் கூடாது. எங்கள் லட்சியங்களை மறுபரிசீலனை செய்வதுடன் மட்டுமில்லாமல், ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளுக்கு எதிரான எங்களின் சாதனைகளையும் மதிப்பாய்வு செய்ய வேண்டும். அப்போதுதான் நமது குரல்கள் வருங்கால சந்ததியினருக்கு நம்பத்தகுந்ததாக இருக்க முடியும்” எனத் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறியிருப்பதாவது:

பாரிஸுடன் போட்டுக்கொண்ட ஒப்பந்தத்தின் இலக்குகளை அடைவதற்கு முயற்சி எடுத்துவருகிறோம். காலநிலை மாற்றம் தொடர்பான நடவடிக்கைகளின் எதிர்பார்ப்புகளையும் கடந்து நாடு செயல்பட்டுவருகிறது.

2005ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் கார்பன் வாயு வெளியேற்றம் 21 விழுக்காடு குறைந்துள்ளது. இந்தியாவின் சூரிய உற்பத்தித் திறன் 2014ஆம் ஆண்டு 2.63 ஜிகாவாட்டிலிருந்து 2020ஆம் ஆண்டு 36 ஜிகாவாட்டாக வளர்ந்துள்ளது.

உலகின் நான்காவது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறன் நம்முடையது. இது 2022ஆம் ஆண்டுக்கு முன்னர் 175 ஜிகாவாட்டை எட்டும். இந்தியா 2030-க்குள் 450 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறன் கொண்டதாக மாற்றும் லட்சிய இலக்கைக் கொண்டுள்ளது.

மேலும், எங்கள் வனப்பகுதியை விரிவுபடுத்துவதிலும், பல்லுயிரியலைப் பாதுகாப்பதிலும் நாங்கள் வெற்றிபெற்றுள்ளோம். உலக அரங்கில், இந்தியா இரண்டு முக்கிய முயற்சிகளுக்கு முன்னோடியாக அமைந்துள்ளது.

1. சர்வதேச சூரிய உற்பத்தித் திறன் கூட்டணி,

2. பேரழிவு தடுக்கும் உள்கட்டமைப்புக்கான கூட்டணி ஆகும்.

2047ஆம் ஆண்டில், இந்தியா 100 ஆண்டுகளை நவீன, சுதந்திர தேசமாக கொண்டாடும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

2015ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட இந்த ஒப்பந்தம் ஐந்து ஆண்டுகளைப் பூர்த்தி அடைந்துள்ளது. இந்த ஒப்பந்தத்தில் பிரான்ஸ், ஐக்கிய நாடுகள், பிரிட்டன், சிலி, இத்தாலி ஆகிய நாடுகள் இணைந்துள்ளன.

இதையும் படிங்க: மாவோயிஸ்ட் பிடியில் விவசாயிகள் - மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

Last Updated : Dec 13, 2020, 11:29 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.