ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் தலைமைப் பொறுப்பை இந்தியா இன்று (ஆக.01) ஏற்றுள்ளது.
முன்னதாக பிரான்ஸ் நாடு இந்தத் தலைமைப் பொறுப்பை வகித்த நிலையில், பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர் அல்லாத நாடான இந்தியா தற்போது தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளது.
அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இந்தியா தலைமைப் பொறுப்பு வகிக்க உள்ள நிலையில், இந்த காலக்கட்டத்தில், கடல்சார் பாதுகாப்பு, அமைதி காத்தல், பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் ஆகிய மூன்று முக்கிய நடவடிக்கைகளில் இந்தியா கவனம் செலுத்தவுள்ளது.
இந்நிலையில், இதுகுறித்துப் பேசியுள்ள ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியப் பிரதிநிதி டி.எஸ்.திருமூர்த்தி, "ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தலைவராக இந்தியா பொறுப்பேற்றுள்ளது. இந்தியாவும் பிரான்சும் வரலாற்றுரீதியாகவும் நெருக்கமான உறவுகளைக் கொண்டுள்ளன.
பாதுகாப்பு கவுன்சிலில் நாங்கள் பணியாற்றியபோது அவர்கள் எங்களுக்கு அளித்த அனைத்து ஆதரவிற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: விமானப் படை தலைமை தளபதி பதவுரியா ஐக்கிய அரபு அமீரகத்துக்கு பயணம்