புவனேஸ்வர்: பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் மூலம் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட தரைவழி தாக்குதல் ஏவுகணையான பிரலே, ஒடிசா கடற்கரையில் உள்ள டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் தீவில் இன்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை புதிய பாலிஸ்டிக் பாதை தொழில்நுட்பங்களுடன் உருவாக்கப்பட்டது.
குறிப்பாக 150 கி.மீ. முதல் 500 கி.மீ. வரை சென்று இலக்கை துல்லியமாக தாக்கக்கூடியது. இதனை மொபைல் லாஞ்சர் மூலம் ஏவலாம். பாலிஸ்டிக் பாதை மிக துல்லியமாக பின்பற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நிலப்பரப்பு தாக்குதலுக்காக உருவாக்கப்பட்ட நவீன ஏவுகணை உற்பத்தி வளர்ச்சியை, இந்த சோதனை ஊக்கப்படுத்தியுள்ளது.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பிற்கு வாழ்த்துகள்" எனத் தெரிவித்துள்ளார். முன்னதாக, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் சூப்பர்சோனிக் ஏவுகணை வீலர் தீவில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: டார்பிடோ சூப்பர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி