ETV Bharat / bharat

"இந்தியாவின் உள் விவகாரங்களில் ஓஐசி தலையிட முயற்சிப்பதை ஏற்க முடியாது" - இஸ்லாமிய நாடுகளின் ஒத்துழைப்புக்கான கூட்டமைப்பு

இந்தியா - பாகிஸ்தான் பிரச்னை குறித்த ஓஐசி பொதுச்செயலாளர் ஹுசைன் பிராஹிம் தாஹாவின் கருத்துக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

India
India
author img

By

Published : Dec 13, 2022, 8:52 PM IST

டெல்லி: இஸ்லாமிய நாடுகளின் ஒத்துழைப்புக்கான கூட்டமைப்பின் (OIC) பொதுச்செயலாளர் ஹுசைன் பிராஹிம் தாஹா, மூன்று நாட்கள் பயணமாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு சென்றிருந்தார்.

அங்கு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த ஹுசைன் பிராஹிம் தாஹா, நீண்ட காலமாக நீடித்து வரும் இந்தியா - பாகிஸ்தான் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், இருநாடுகளையும் பேச்சுவார்த்தைக்கு ஒருங்கிணைக்க தாங்கள் முயற்சித்து வருவதாக தெரிவித்திருந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த மத்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, ஹுசைன் பிராஹிம் தாஹாவின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். ஜம்மு காஷ்மீர் தொடர்பான விவகாரத்தில் ஓஐசி அமைப்புக்கு எந்த பங்கும் இல்லை என்றும், இந்தியாவின் உள்விவகாரங்களில் ஹுசைன் பிராஹிம் தாஹா தலையிட முயற்சிப்பதை ஏற்க முடியாது என்றும் தெரிவித்தார்.

சர்வதேச பிரச்னைகள் மீது அப்பட்டமான வகுப்புவாத, பாகுபாடான மற்றும் தவறான அணுகுமுறையைக் கொண்டுள்ளதால், ஓஐசி ஏற்கெனவே அதன் நம்பகத்தன்மையை இழந்துவிட்டது என்றும், அந்த அமைப்பின் பொதுச்செயலாளரான ஹுசைன் பிராஹிம் தாஹா பாகிஸ்தானின் ஊதுகுழலாக மாறிவிட்டார் என்றும் தெரிவித்தார்.

அதேநேரம் ஜம்மு காஷ்மீரில் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பாகிஸ்தானின் மோசமான செயல்பாடுகளை தாஹா ஆதரிக்கமாட்டார் என்று நம்புவதாகவும் அரிந்தம் பாக்சி தெரிவித்தார்.

இதையும் படிங்க:இந்திய - சீன எல்லையில் நிலைமை சீராக உள்ளது: சீன வெளியுறவுத்துறை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.