இந்தியாவில் கடந்த சில நாள்களாகக் கரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நான்கு லட்சத்து 12 ஆயிரத்து 262 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த எண்ணிக்கை 2 கோடியே 10 லட்சத்து 77 ஆயிரத்து 410ஆக அதிகரித்துள்ளது.
குறிப்பாக மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு, டெல்லி ஆகிய மாநிலங்களில் அதிகளவிலான கரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. அதேபோல், நேற்று (மே.5) கரோனாவால் பாதிக்கப்பட்ட 3,980 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 30 ஆயிரத்து 168 ஆக அதிகரித்துள்ளது.
தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை ஒரு கோடியே 72 லட்சத்து 80 ஆயிரத்து 844ஆக உள்ளது. தற்போது, 35 லட்சத்து 66 ஆயிரத்து 398 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதுவரை மொத்தமாக 16 கோடியே 25 லட்சத்து 13 ஆயிரத்து 339 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.