இந்தியாவில் மேலும் ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 879 பேருக்கு புதிதாக கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 839 பேர் உயிரிழந்துள்ளனர். 90 ஆயிரத்து 584 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நாடு முழுவதும் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 69 ஆயிரத்து 275ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை நாட்டில் மொத்தம் ஒரு கோடியே 33 லட்சத்து 58 ஆயிரத்து 805 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், ஒரு கோடியே 20 லட்சத்து 81 ஆயிரத்து 443 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.
தற்போது மொத்தம் 11 லட்சத்து எட்டாயிரத்து 87 பேர் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதுவரை மொத்தம் 10 கோடியே 15 லட்சத்து 95 ஆயிரத்து 147 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கரோனா பரிசோதனையில் குளறுபடி: ஸ்வாப் ஸ்டிக்குகளை உடைக்கும் ஊழியர்கள்!