ETV Bharat / bharat

கோவிட்-19 நிலவரம்: ஒரே நாளில் 46,951 பேருக்கு பாதிப்பு - இந்தியாவில் கோவிட்-19 உயிரிழப்பு

கடந்த 24 மணிநேரத்தில் 46 ஆயிரத்து 951 நபர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் 212 பேர் கரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தனர்.

கோவிட்-19
கோவிட்-19
author img

By

Published : Mar 22, 2021, 12:55 PM IST

நாட்டின் கரோனா பாதிப்பு எண்ணிக்கை நிலவரத்தை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 46 ஆயிரத்து 951 நபர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 212 பேர் கரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தனர்.

இந்தியாவில் கோவிட் - 19 நிலவரம்

இந்தியாவில் இதுவரை ஒரு கோடியே 16 லட்சத்து 46 ஆயிரத்து 81 பேர் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது மூன்று லட்சத்து 34 ஆயிரத்து 646 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். நாட்டில் இதுவரை ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 967 பேர் கரோனாவால் உயிரிழந்தனர்.

பரிசோதனை, தடுப்பூசி நிலவரம்

கரோனா பரிசோதனை விவரம் குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் இன்று (மார்ச்.22) வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று (மார்ச்.21) வரை நாடு முழுவதும் 23 கோடியே 44 லட்சத்து 45 ஆயிரத்து 774 நபர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் நேற்று மட்டும் எட்டு லட்சத்து 80 ஆயிரத்து 655 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நேற்று மட்டும் 25 லட்சத்து 40 ஆயிரத்து 449 பேருக்கு கோவிட்-19 தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதுவரை நான்கு கோடியே 46 லட்சத்து மூன்றாயிரத்து 841 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக பாதிப்புகள் ஏற்படும் மாநிலங்கள்

கடந்த 24 மணிநேரத்தில் மகாராஷ்டிராவில் 30 ஆயிரத்து 535 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. அதற்கு அடுத்தபடியாக, கேரளா, பஞ்சாப், கேரளா, கர்நாடகா, குஜராத், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அதிக பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

இதையும் படிங்க: அடடே... தோசையில் அரசியல் - கேரளாவின் புது ட்ரெண்ட்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.