டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக இரண்டு லட்சத்து 85 ஆயிரத்து 914 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கடந்த நாளை ஒப்பிடுகையில் இன்று பாதிப்பு எண்ணிக்கை 11 விழுக்காடு உயர்ந்துள்ளது.
17 லட்சத்து 69 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நேற்று, ஒரே நாளில் கரோனாவால் 665 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு நான்கு லட்சத்து 91 ஆயிரத்து 127 ஆக உள்ளது. நாட்டில் தற்போது 22 லட்சத்து 23 ஆயிரத்து 018 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை மூன்று கோடியே 73 லட்சத்து 70 ஆயிரத்து 971 ஆக உள்ளது. இதுவரை மொத்தம் 163.58 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளது. அதில் நேற்று (ஜன 25) மட்டும் 59 லட்சத்து 50 ஆயிரத்து 731 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
இதுவரை 93 கோடியே 43 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஒரு டோஸ் தடுப்பூசியும், 69 கோடியே 24 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இரண்டு டோஸ் தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர். சுமார் 90 லட்சம் பேர் முன்னெச்சரிக்கை டோஸ்சும் செலுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: Republic Day: 15,000 அடி உயரத்தில் தேசிய கொடியை பறக்கவிட்ட எல்லை வீரர்கள்