நாட்டின் கரோனா பாதிப்பு எண்ணிக்கை நிலவரத்தை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, கடந்த 24 மணிநேரத்தில் 16 ஆயிரத்து 504 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அத்துடன் 214 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
கோவிட் - 19 நிலவரம்
இந்தியாவில், இதுவரை ஒரு கோடியே மூன்று லட்சத்து 40 ஆயிரத்து 469 பேர் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது இரண்டு லட்சத்து 43 ஆயிரத்து 953 பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
நாட்டில் இதுவரை ஒரு லட்சத்து 49 ஆயிரத்து 649 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 49 ஆயிரத்து 666 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் 12 ஆயிரத்து 156 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கு, அடுத்தபடியாக கர்நாடகாவில் 12 ஆயிரத்து 107 பேர் உயிரிழந்துள்ளனர்.
பரிசோதனை நிலவரம்
கரோனா பரிசோதனை விவரம் குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் இன்று (ஜன. 04) வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 7 லட்சத்து 35 ஆயிரத்து 978 நபர்களுக்கு பரிசோதனை மேற்கொண்டுள்ளனர்.
இதுவரை சுமார் 17 கோடியே 56 லட்சத்து 35 ஆயிரத்து 761 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஐநாவின் பாதுகாப்பு கவுன்சிலில் பறக்கப்போகும் மூவர்ணக்கொடி!