டெல்லி: தென் ஆப்பிரிக்காவில் உருவான ஒமைக்ரான் தொற்று, இரண்டு வாரத்தில் 100 நாடுகளுக்கும் மேல் பரவிஉள்ளது. இந்தியாவில் இரண்டு வாரங்களாக வேகமாக பரவிவருகிறது. இப்படிப்பட்ட சூழலில், நாடு முழுவதும் கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துவருகிறது.
இதனால் மத்திய, மாநில அரசு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடைவிதித்தல், கட்டுப்பாடுகளை கடுமையாக்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. இந்த நிலையில், மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள புள்ளி விவரப்பட்டியலில், நாடு முழுவதும் நேற்றைய நிலவரப்படி 1,431 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக மகாராஷ்டிராவில், 454 பேருக்கும், டெல்லியில் 351 பேருக்கும், தமிழ்நாட்டில் 118 பேருக்கும் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒமைக்ரானால் பாதிக்கப்பட்ட 488 பேர் குணமடைந்துள்ளனர்.
கரோனா தொற்றை பொருத்தவரையில், நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 22,775 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 406 பேர் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உலகம் முழுவதும் கரோனா தொற்று அதிகரித்துள்ளது. குறிப்பாக அமெரிக்கா, பிரான்ஸ் நாடுகளில் பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்தை எட்டியுள்ளது.
இதையும் படிங்க: இந்தியாவில் ஆயிரத்தை நெருங்கும் ஒமைக்ரான்