கடந்த சில நாள்களாகவே, எல்லைப் பகுதியில் இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே அத்துமீறல் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துவருகின்றன. ஜம்மு காஷ்மீர் நிலைமை குறித்து ஆய்வு மேற்கொண்ட இரு நாடுகளும் எல்லை ஒப்பந்தங்களை தீவிரமாக பின்பற்ற தற்போது ஒப்புதல் தெரிவித்துள்ளன.
டெல்லி, இஸ்லாமாபாத்தில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், "மோதல் சம்பவங்கள் அதிகமாக நடைபெறும் பகுதிகள் குறித்து இருநாட்டு ராணுவ இயக்குனர் ஜெனரல்கள் ஆலோசித்தனர். எல்லை பகுதிகளில் இருநாடுகளும் சுதந்திரமான வெளிப்படையான வகையில் ஆய்வு மேற்கொண்டன.
பரஸ்பர ரீதியாக பயனடையவும் அமைதியை நிலைநாட்டவும் ஒப்புதல் தெரிவிக்கப்படுகிறது. அமைதியை கெடுக்கும் விதமான இருதரப்பு பிரச்னைகள், குறைகள் ஆகியவற்றை கேட்டறிந்து அதனை சரி செய்ய இருநாட்டு ராணுவ இயக்குனர் ஜெனரல்கள் ஒப்புதல் தெரிவித்துள்ளனர்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.