ETV Bharat / bharat

பாகிஸ்தான் சிறையில் 700 இந்தியர்கள் தவிப்பு - வெளியுறவுத்துறை தகவல்! - இந்தியா

பாகிஸ்தான் சிறைகளில் 654 மீனவர்கள் உள்பட 700க்கும் மேற்பட்ட இந்தியர்கள் அடைத்து வைக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளியுறவுத்துறை
வெளியுறவுத்துறை
author img

By

Published : Jan 1, 2023, 10:23 PM IST

டெல்லி: கடந்த 2008ஆம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் இடையிலாக தூதரக ரீதியிலான ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி ஆண்டின் தொடக்க நாள் மற்றும், ஜூலை மாதத்தின் முதல் நாள் ஆகிய தேதிகளில் இருநாட்டு சிறைகளில் உள்ளவர்களின் பட்டியலை பகிர்ந்து கொள்வது என முடிவு செய்யப்பட்டது.

அதன்படி எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட மீனவர்கள், அத்துமீறி நாட்டிற்குள் நுழைந்ததாக கைது செய்யப்பட்டவர்களின் பட்டியல் பகிரப்பட்டு கைதிகள் பரிமாற்ற முறை மூலம் இந்தியர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாகிஸ்தான் சிறையில் கைதிகளாக உள்ள இந்திய குடிமக்கள், காணாமல் போன பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மற்றும் மீனவர்கள் ஆகியோர் அடங்கிய பட்டியலை விரைந்து அளிக்குமாறு பாகிஸ்தான் வெளியுறவுத் துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதன்படி வெளியான பட்டியலில் தண்டனைக் காலம் முடிந்தும் 631 மீனவர்கள் மற்றும் 2 இந்தியர்கள் பாகிஸ்தான் சிறைகளில் உள்ளது தெரியவந்தது. அவர்கள் இந்திய குடிமக்கள் என்பதற்கான சான்று உறுதி செய்யப்பட்டு, பாகிஸ்தானிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுபோக, பாகிஸ்தான் காவலில் உள்ள, இந்தியர்கள் எனக் கூறப்படும் 30 மீனவர்கள் மற்றும் 22 கைதிகள் ஆகியோர் பற்றி தகவல்கள் அளிக்கும்படி கேட்கப்பட்டுள்ளது.

அதேபோல், இந்திய சிறைகளில் உள்ள மீனவர்கள் உள்பட 71 கைதிகளின் தகவல்களை பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்டு உள்ளதாகவும், அவர்களின் தேசிய அந்தஸ்தை உறுதி செய்யுமாறு வலியுறுத்துமாறு கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: புத்தாண்டு: கோவா சென்று திரும்புகையில் நடந்த கார் விபத்தில் 4 தமிழர்கள் பலி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.